2024 ஜனவரி 16 முதல் 18 வரை
சென்னை, ஜூன் 9- நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 16 முதல் 18ஆம் தேதி வரை இரண்டாவது சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதா னத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், 2024ஆம் ஆண் டுக்கான சென்னை பன்னாட்டு புத்த கக் கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவிக்கும் நிகழ்ச்சி கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 7.6.2023 அன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதா வது: எழுத்தாளர்களின் படைப்பு கள், இலக்கியங்கள் உலகம் முழு வதும் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
உலகத்தில் இருக்கின்ற எந்த மொழியாக இருந்தாலும், அம் மொழியில் உள்ள நல்ல எழுத்தா ளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளை நாம் கொண்டாடும் விதமாகவும், அந்த படைப்புகளை தமிழ் மக்களுக்கு கொண்டு செல் லும் விதமாகவும் பன்னாட்டு புத்த கக் கண்காட்சியை நடத்துகிறோம்.
2023ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை குறுகிய காலகட்டத்தில் நடத்தினோம். அப்போது 24 நாடுகளில் இருந்து 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றை நடை முறைப்படுத்த மொழிபெயர்ப்பு மானியமாக ஏறத்தாழ ரூ.3 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க இருக்கிறது. கலைஞர் நூற்றாண் டில் மொழிபெயர்ப்பு மானியம் வழங்குவதை பெருமையாகக் கருதுகிறோம்.
2024ஆம் ஆண்டு சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜன. 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நடத்தப்படும். அதிகமான அரங்கு களை அமைக்கப்படும். புத்தகக் கண்காட்சியில் மதிப்புறு விருந்தின ராக மலேசியா நாட்டை அழைக்க உள்ளோம். -இவ்வாறு அவர் கூறி னார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
No comments:
Post a Comment