பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

சென்னை, ஜூன் 25 தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்வு நடைமுறையில் மாற்றம் இருக்குமா? என செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டனர்.  

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தபட்டு வருகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்த முறை கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டு 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இதையும் கருத்தில் கொண்டே 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பழைய முறையை கொண்டு வர வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் இப்போது வரை எந்த மாற்றமும் கிடையாது. பொதுத்தேர்வு நடைபெறும் என்ற வகையில்தான் தற்போதும் இருக்கிறது. ஆசிரியர் சங்கங்கள் உடன் பகிரப்பட்ட கருத்துகள் அனைத்தும் மாநில கல்விக் கொள்கை குழுவிடம் வழங்கப்படும். இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


No comments:

Post a Comment