தமிழ்நாடு அரசு திட்டமிட்டபடி 1 டிரில்லியன் டாலர் தொழில் முதலீடுகளை பெற முனைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

தமிழ்நாடு அரசு திட்டமிட்டபடி 1 டிரில்லியன் டாலர் தொழில் முதலீடுகளை பெற முனைப்பு!

'சி.என்.பி.சி.' டி.வி.18 நியூஸ் தொலைக்காட்சி பாராட்டு!

சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு அரசு திட்டமிட்டபடி 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ப முனைப்புடன் செயல்பட்டு வருவதாக சி.என்.பி.சி. டிவி 18 பாராட்டு தெரிவித்துள்ளது. சி.என்.பி.சி. - டி.வி. 18 நியூஸ் தொலைக்காட்சியில் தமிழ்நாடு தொழில் துறையில் தொடர்ந்து முன்னேறி வருவது குறித்து ஒரு செய்திக் கட்டுரை ஒளிபரப்பாகி உள்ளது. அது வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே 5 பில்லியன் டாலர் அளவிற்கு தொழில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் பெறப்பட் டுள்ள நிலையில், தமிழ்நாடு தொழில் துறை யில் எதிர்பார்த்த முதலீட்டை வெகு விரைவில் அடைந்துவிடும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு பன்னாட்டு நிறு வனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் என்கிறபோது தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி தொடர்பான தொழில்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வருகிறது.

ஏற்கெனவே 5 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிலான தொழில்துறை ஒப்பந் தங்கள் மேற்கொண்டிருப்பதை பார்க்கும் போது, தொழில்துறையில் மேற்கொள்ள இருக்கும் முதலீட்டை எட்டுவதற்காக வேகவேகமாக முன்னேறி வருகிறது, என்றே கூறத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் செயிண்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை தனது உற்பத்தி நிறுவனத்தை ஏற்கெனவே சென்னையில் நிறுவியுள்ளது. அதன் பங்கு என்று பார்க் கும்போது நாட்டின் மொத்த விற்பனையில் 98 சதவிகிதம் என்கிற அளவில் உள்ளது.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் செயிண்ட் கோபைன் நிறுவன முதலீடு என்பது 3,750 கோடி ரூபா யாக உள்ளது. விரைவில் அந்த நிறுவனம் விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவன அதிகாரி உன்னி கிருஷ்ணன் இது பற்றி குறிப்பிடுகை யில், தமிழ்நாட்டில் எல்லா சூழல்களும் சாதக மாக உள்ளதால் எங்கள் உற்பத்தியும் மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, குஜராத் மாநிலத்திலும் இங்கு உற்பத்தி செய்யப் படும் தயாரிப்புகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது. அண்மையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச் சியில் விரைவில் கோவையில் எலக்ட் ரானிக் வாகன உற்பத்திக்காக 20 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்வது குறித்து அறிவிப்பு வெளியானது.

எதிர்கால தொழில்நுட்பத்தை அடிப் படையாகக் கொண்டு எலக்ட்ரானிக் வாகன உற்பத்திக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனடிப்படையில் நாங்கள் இருக்கின்ற தொழில்நுட்பத்திறனுடன் மேலும் புதிய புதிய உத்தியுடன் எங்களது உற்பத்தியை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளோம் என்று அதன் துணைத் தலைவர் புனித் ஆனந்த் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு தொழில்துறையில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு, தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அள விற்கு எட்ட வேண்டும் என்று முனைப் புடன் செயல்பட்டு வருகிறது. எரிசக்தி, உற்பத்தி, ஆட்டோமெடிக் பிரிவுகளில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பதை குறிப்பிட்டு அந்நிறுவன செயல் அதிகாரி சம்பத் தெரிவித்து, அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை விவரித்தார். மருந்து தயாரிக்கும் ஜப்பான் நிறு வனமான ஓம்ரான் 15.7 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் சென்னைக்கு அருகில் பெருவயலில் தொழிற்சாலை தொடங்க உள்ளது. அது மட்டுமின்றி மிட்சுபிஷி எலக்ட் ரானிக் நிறுவனம் தமிழ்நாட்டில் 230 மில்லியன் டாலர் முதலீட்டில் ஏர் கண் டிஷனர் தொழிற்சாலை தொடங்கி சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்க உள்ளது.

அதுவும் தவிர மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனம் தமிழ்நாட் டில் தூத்துக்குடியில் 4.1 பில்லியன் டாலர் முத லீட்டில் 4000 ஹெக்டர் புதிய தொழிற்சாலை தொடங்க உள்ளது. இவைகள் தவிர, அமெ ரிக்க நிறுவனமான சிஸ்கோ, 1200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் சென் னைக்கு அருகே தொழிற்சாலை நிறுவ உள்ளது. இது தொடர்பான புரிந் துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி ஒன்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் னிலை யில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்காக உள் கட்ட மைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவ தால், மேலும் மேலும் தொழில் நிறுவனங்கள் இங்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே அதற்கான நட வடிக்கைகள் தொடங்கிவிட்டன என்கிற நல்ல செய்தி வந்த வண்ணம் உள் ளன என்கிறார் இந்திய தொழில் நிறு வன அமைப்பை (சி.அய்.அய்.) சேர்ந்த பாலி என்பவர். என்றாலும், தொழிற்சாலை களுக்கு உகந்த சூழ்நிலைகளான இடம் கைய கப்படுத்தல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள்கட்டமைப் புகள் உருவாக்குதல் உள் ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கத் தான் செய்கின்றன. அத்தகைய சவால்களை சந்திப்பதில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு இடம் தராமல், உலக ளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்கவும், அதற்காக தொழில் முதலீடுகளைப் பெறவும் உரிய வகையில் செயல்பட்டு வருகிறது. 

- இவ்வாறு சி.என்.பி.சி. - டி.வி. 18 நியூஸ் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment