1977- தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

1977- தேர்தல்

1973 தொடங்கி முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பல அற்புத சட்டங்கள். திட்டங்களை உருவாக்கிப் பேறு பெற்றிருந்தார். அந் நிலையில் கலைஞரைப் பலவீனப் படுத்தவும். தனிமைப்படுத்தவும் வழக் கத்திற்கு எதிராக சிவர் எடுத்த தவ றான போக்குகளும், அவர்கள் பிரி வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத் திக் கொண்ட ஒன்றியத்திலுள்ள ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடச் சாதகமாகவே அமைந்தன.

இந்தியாவில் 1975ஆம் ஆண்டு முழுவதும் நெருக்கடி நிலை கொடு மைகள் தொடர்ந்தன. எழுத முடியாது பேச முடியாது எனச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாத நிலையே ஏற்பட்டிருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் மிசாக் கொட் டடியில் இதனை எதிர்த்து இரண் டாவது விடுதலைப் போராட்டக் களத்தை அமைத்தவரும் முதல மைச்சர் கலைஞர் ஒருவரே. அதனால் ஆட்சிக் கட்டிலையே இழந்தார். “முரசொலி” தணிக்கை செய்யப் பட்டது. கலைஞரின் அலுவலங்களில் அச்சுறுத்தலுடன் கூடிய சோதனை களில் ஒன்றிய அமைப்புகள் ஈடு பட்டன.

நீதிபதி சர்க்காரியா என்பவர் தலைமையில் கலைஞர் அவர்களுக் கும் மற்ற அமைச்சர்களுக்கும் எதிராக விசாரணைக் ஆணையம் அமைத்து மிரட்டல் விடப்பட்டது. அவரின் வீட்டு பெண்கள் கூடசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். நிழல் போல் இருந்தவர்கள் எல்லாம் தழல் போல் கலைஞரது உள்ளத்தில் சூடு போட்டு விட்டு ஓடினர். பல தி.மு.க. முன்னோடிகள் தி.மு.க.விலிருந்து அச்சம் கொண்டு பிரிந்து சென்று கலைஞரைத் தனிமைப்படுத்தினர்.

முரசொலி மாறன், ஆர்க்காடு வீராசாமி. டி.ஆர்.பாலு எனப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறைக் கொட்டடியில் அடைக்கப் பட்டுக் கிடந்தனர். கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக தளபதி மு.க.ஸ்டாலின் மிசா சிறையில் வைக்கப்பட்டார். கொள்கைப் பரப்புச் செயலாளர் சிட்டிபாபு, சாத்தூர் பால கிருஷ்ணன் போன்றோர் கல்லறைக் குயில்களானார்கள்.

கலைஞரின் பேனாவும், நாவும் சுதந்திரப் போராட்டத்தை ஓராண் டிற்கு மேல் நடத்தின. அந்நிலையில் நெருக்கடி நிலை நீக்கப்பட்டவுடன் 1977இல் சட்டமன்றத் தேர்தலைக் கலைஞர் அவர்கள் தலைமையில் தி.மு.க சந்தித்தது. கலைஞர் அவர்கள் அண்ணா நகர் தொகுதியில் கள மிறங்கினார்.

No comments:

Post a Comment