சைதாப்பேட்டை, ஜூன் 7 - தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.6.2023 மாலை 6 மணி யளவில் சைதாப்பேட்டை கோடம் பாக்கம் சாலையில் உள்ள மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் இல் லத்தில் மாவட்டத் தலைவர்
இரா.வில்வநாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேது ராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஈரோடு பொதுக்குழு தீர்மானம் மற்றும் சென்னையை சேர்ந்த ஆறு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களை செயல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
தலைமை கழக அமைப்பாளர் தே.செ.கோபால் வழிகாட்டு கருத் துரைகளை கூறி நோக்க உரை யாற்றினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் சா. தாமோதரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு. சண் முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் ச.மகேந் திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி ஆகி யோர் கருத்துகளை எடுத்துரைத் தனர்.
புதிய பொறுப்பாளர்களை அறி முகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்து கூறப்பட்டது.
ம.தமிழ்மதி சைதை க. வாசு தேவன் ஆகியோர் கலந்து கொண் டனர்.
இறுதியாக கீழ்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1. கொல்கத்தாவில் இருந்து புறப் பட்ட கோரமண்டல் விரைவு தொடர் வண்டி 2.6.2023 அன்று ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கி சுமார் 275 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. மாவட்டப் பகுதிகள் தோறும் கொடிக்கம்பம் மற்றும் அறிவிப்பு பலகைகளை அமைப்பதெனவும்,
3. முப்பெரும் நூற்றாண்டுகளை விளக்கி, பகுதிகள் தோறும் நாள் ஒன்றுக்கு இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் என ஒருங்கிணைந்த முறையில் தொடர் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும், கூட்டங்களை ஜூன் மாதம் 15 ஆம் நாள் முதல் தொடங்குவது எனவும்,
4. தெருமுனைக் கூட்டங்களின் இறுதியில் முப்பெரும் நூற்றாண்டு களை விளக்கி மூன்று பொதுக் கூட்டங்களை நடத்துவது எனவும்,
5. நோக்கங்களை விளக்கி பொது வான துண்டறிக்கைகளை தயார் செய்து வழங்குவதெனவும்,
6. பகுதி கழகம் தோறும் புதுப் பித்து புதிய அமைப்புகளை ஏற் படுத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து நன்றி கூறினார்.
No comments:
Post a Comment