சென்னை, ஜூன் 23 - தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின்கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது.
அதில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 62% கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், 18% கூட்டுறவு சங்கங்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டபட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை தணிக்கை அறிக்கை அடிப்படை யில் 1,068 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக வடக்கு சென்னையில் உள்ள பேலஸ் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் ரூ.8 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 கூட்டுறவு சங்கங்களில் மட்டும் தலா ரூ.1 கோடிக்கும் மேல் முறைகேடு ந்டந்துள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூ.42 கோடி என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment