கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.6.2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.6.2023

டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:

👉தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே,எம்.பி.  பிரபுல் படேல் ஆகிய இருவரை சரத் பவார் நியமித்தார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉தமிழ்நாடு வரும் அமைச்சர் அமித்ஷா, கடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்துள்ளோம் என்ற பட்டியலை வெளியிட தயாரா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

தி இந்து:

👉பாஜகவுக்கு மாற்றான கருத்தினை எதிர்க்கட்சிகள் மக்கள் முன் வைக்க வேண்டும். பிரதமர் யார் என்பது முக்கியம் அல்ல - சரத்பவார் கருத்து. ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத் தில் கலந்து கொள்ளவும் முடிவு.

தி டெலிகிராப்:

👉கடந்த ஒன்பது ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை மக்கள் மேல் மோடி அரசு சுமத்தியுள்ளது. இதற்கு முன்பு 14 பிரதமர்கள் செய்ய முடியாததை மோடி செய்துள்ளார் என காங்கிரஸ் விமர்சனம்.

👉மணிப்பூர் வன்முறையில் இதுவரை 100 பேர் இறந்துள்ளனர். 45000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து வாய் திறக்கவில்லை என கல்வியாளர் ஏ. பிமோல் அகோய்ஜாம் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉டில்லி அரசுக்கு எதிரான ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை ஒரு லட்சம் பேர் 'மகா பேரணியில்' கலந்து கொள்வார்கள் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment