காஞ்சிபுரம் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
காஞ்சிபுரம், ஜூன் 23- காஞ்சிபுரத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.6.2023 அன்று மாலை 5 மணியளவில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மலைக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.வெ. முரளி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆ. மோகன் வரவேற்புரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் முனைவர்
பா. கதிரவன் தொடக்க உரையாற்றினார். பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு இவற்றிற்காக தந்தை பெரியார் ஆற்றிய தொண்டு குறித்தும், வைக்கம் நூற்றாண்டு குறித்தும் அவர் தம் உரையில் எடுத்துரைத்தார்.
நாத்திகம் நாகராசன், காஞ்சி அமுதன், மருத்துவர் மு. ஆறுமுகம், ந.சக்திவேலன், அ.வெ.சிறீதர், ரத்தின பச்சையப்பன், க.சேகர், இ.இரவிந் திரன், எஸ். செல்வம், அ.ரேவதி, கு. அருளானந்தம், த. சிதம்பரநாதன், பா. இளம்பரிதி, பெ. சின்னதம்பி உள்ளிட்டோர் உரைக்குப்பின், மாநில பகுத்தறி வாளர் கழக பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன் பகுத்தறிவாளர் கழகத்தினரின் கடமை குறித்து உரையாற்றினார்.
நிறைவாக, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலை வர் இரா.தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழ கத்தின் தோற்றம் வளர்ச்சி, செயல்பாடுகள் முத லியவை குறித்தும், புதிய பொறுப்பாளர்கள் செயல் பட வேண்டிய விதம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
வைக்கம் நூற்றாண்டு குறித்து மாவட்டம் முழுவதும் கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டங் கள் நடத்துவது என்றும், பகுத்தறிவாளர் கழகத்தில் 100 உறுப்பினர்களைச் சேர்ப்பது என்றும்,புதிய தோழர்களுக்குப் பயிற்சிப் பட்டறை நடத்துவது என்றும்,பெரியார் பிறந்த நாளையொட்டி நடத் தப்படும் 'பெரியார் 1000' என்ற போட்டித் தேர்வில் 5000 மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது என்றும், பகுத்தறிவாளர் கழகத்திற்கு ஒன்றியந் தோறும் அமைப்பை உருவாக்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மாவட்ட அமைப்பாளர் - ந. சிதம்பரநாதன்,
மாவட்டத் தலைவர் - வெ. மார்க்ஸ்,
மாவட்டச் செயலாளர் - பா. இளம்பரிதி,
காஞ்சி மாநகரத் தலைவர் - தே. பிரபாகரன்,
காஞ்சி மாநகரச் செயலாளர் - பெ. சின்னதம்பி
நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வீ. கோவிந்தராஜி, எழுச்சிப் பாடகர் உலக ஒளி, சண். கனகசபை, எம்.சேகர், ஆ. வெங்கடேசன், குறளரசு, மருத்துவர் குழலரசி, எழிலரசி உள்ளிட்ட தோழர்களும் பங்கேற்றனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் த. சிதம்பரநாதன் அவர்கள் மாதந்தோறும் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த உறுதியளித்து, கூட்டம் நடத்த 1000/- ரூபாய் நன்கொடை வழங்கினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெ. மார்க்ஸ் அனைவர் கருத்துகளையும் தொகுத்துக் கூறி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment