குமரி, மே 22- குமரி மாவட்ட மக்களிடம் சமூகநீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார் பாக சமூகநீதி துண்டறிக் கைப் பரப்புரை செய்யப் பட்டது.
தந்தை பெரியாரு டைய சமூகநீதிச் சிந்த னைகள், திராவிடர் கழ கம் மக்களுக்கு பெற்றுத் தந்த உரிமைகள், சமூக நீதியின் சின்னம் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய உழைப் பால் வந்த மண்டல் குழு பரிந்துரை அமல்படுத்தப் பட்டு அதனால் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு கிடைத்த 27% இட ஒதுக்கீட்டு உரிமை, தமிழ்நாட்டில் கிடைத்த 69% இட ஒதுக்கீட்டு உரிமை போன்ற வரலாற் றுச் செய்திகள் அடங்கிய துண்டறிக்கைகளை கன்னியாகுமரி பகுதி பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்த னர் குமரி மாவட்ட திரா விடர் கழகத் தோழர்கள்.
இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் பாசறை மாவட்ட தலைவர் மஞ்சு குமார தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமாரதாஸ் கன்னி யாகுமரி கிளை அமைப் பாளர் க.யுவான்ஸ், உட் பட பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரு டைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.
No comments:
Post a Comment