நெல்லை, தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடலில் நிறைவேற்றம்
நெல்லை, மே 31- நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 26.5.2023 அன்று மாலை 5 மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் அரங்கில் மாவட்ட தலைவர் ச .இராஜேந்திரன் தலை மையில் உற்சாகமாக நடைபெற் றது.
கழக காப்பாளர்கள் இரா.காசி, சி.வேலாயுதம், மாவட்டக் கழக செயலாளர் இரா .வேல்முருகன், பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்கள் சு. கனகதாமஸ், கா. நீலகிருஷ்ணபாபு,கு.வெள்ளத் துரை, ச.சங்கரதாஸ், மாணவர் அணி பொறுப்பாளர் செ.சூர்யா, செ.சந்திரசேகரன்,காருகுறிச்சி செல்வ. சுந்தரசேகர், வீரவநல்லூர் மா.கருணாநிதி, எம்.அன்பு, முனை வர் கி.சவுந்தர்ராசன் உள்ளிட்ட தோழர்களும் பொறுப்பாளர்களும் பங்கேற்று சிறப்பாக கருத்துரை வழங்கினார்கள்.
தீர்மானங்கள்
ஈரோட்டில் நடைபெற்ற திரா விடர் கழக பொதுக்குழு கூட்டத் தின் தீர்மானங்களை செயலாக்கு வது என முடிவு செய்யப்பட்டது.
4.6.2023 அன்று சேரன்மாதேவி யில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பெரியாரை எப்படி புரிந்து கொள் வது?, ஆசிரியர் கி.வீரமணி 90 நூல் அறிமுக விழா நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 28, 29, 30 ஜூலை 1 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடை பெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் சிறப்பாக பங்கெடுப்பது என முடிவு செய்யப்பட்டது .
ஒன்றியங்கள் தோறும் கழகக் கொள்கையினை விளக்கி தெரு முனை கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது .
தென்காசி
தென்காசி மாவட்டம் கீழ்ப்பா வூரில் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர்கள் பி.பொன்ராசு,அய்.இராமச்சந் திரன் நகரத்தலைவர் மு.இராம சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வடகரை சண்முகம், ஆலங்குளம் செந்தில்குமார், இல.,அன்பழகன், மாநில மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் சு.இனியன், தஞ்சை முனைவர் கி.சவுந்தர்ராசன் ஆகியோர் பங் கேற்று சிறப்பித்தார்கள்.
சூன் 28, 29, 30, சூலை 1 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடை பெறும் பெரியாரியல் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்துவது எனவும், ஈரோடு பொதுக்குழு கூட் டத்தின் முடிவுகளை செயலாக்கு வது எனவும் தீர்மானிக் கப்பட்டது.
மாவட்டத்தின் அனைத்து ஒன் றியங்களிலும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கூட் டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
29.5.2023 அன்று மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை கழகக் குடும்பத்தினர் அனைவரையும் சந் திப்பது என முடிவு செய்யப்பட்டது.
3.6.2023அன்று கீழப்பாவூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற் றாண்டுவிழா மற்றும் "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?", "ஆசிரியர் கி.வீரமணி 90" ஆகிய புத்தகங்கள் அறிமுக விழா நடத் துவது என முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment