‘‘நம் நாட்டில் சகிப்புத்தன்மை கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டாது; அவர்களில் பலரும்கூட பொதுவாழ்வில் பதவிகளை அடைவதற்காகவே சகிப்புத்தன்மை என்ற முக மூடியை அணிகின்றனர். அவர்கள் ஓய்வு பெறும் போது தங்களின் சுயரூபத்தைக் காட்டும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர்'' என்று ஒன்றிய இணை அமைச்சர் சத்தியபாஸின் பாகல் கூறி யிருக்கிறார்
ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுகின்ற பேச்சா இது? மதசார்பற்றத் தன்மைக்கு கட்டியம் கூற வேண்டிய ஓர் அமைச்சர், இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி இழிவுபடுத்திப் பேசலாமா?
பாபர் மசூதி வழிபாட்டுத்தலம் அல்ல, வெறும் கட்டடம் என்று பேசியவர் தானே ஜெகத் குரு என்று போற்றப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் தானே இந்த பிஜேபி சங்பரிவார் கும்பல், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று பேசுகின்ற கட்சியைச் சேர்ந்தவர் வேறு எப்படித் தான் பேசுவார்?
சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும், கருநாடகத் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளர்களில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் உண்டா?
இதுதான் மதச்சார்பற்ற அரசா, கட்சியா? வாக்காளர்களே சிந்திப்பீர்!
No comments:
Post a Comment