சிதம்பரம், மே 28 - கடலூர் மாவட் டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தை களுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தை திருமணங்கள் சட்டத் தின்படி நடவடிக்கை எடுக்கப் பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தேசிய குழந் தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் வந்து விசாரணை மேற்கொண் டார். முதலில் நடராஜர் கோவி லுக்கு சென்று அங்கு தீட்சிதர் களிடம் குழந்தைகள் திருமணம் பற்றி விசாரணை செய்தார்.
பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று இந்த வழக்கு சம்பந்தமாக அறிக்கை கேட்டார்.
குழந்தைகள் திருமணம் நடை பெற்றதாக கூறப்படும் வீடு களுக்கும் சென்று விசாரைண மேற்கொண்டார். இந்த நிலையில் தீட்சிதர் குழந்தைகளுக்கு திரும ணம் நடைபெற்ற ஒளிப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment