தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்-கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்-கருத்தரங்கம்

தாம்பரம், மே 5- 30.4.2023 அன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாள் தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் பகுத் தறிவு புத்தக நிலையத்தில் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை சிறப்பு கருத்தரங்கம். “பொறியாளர் ந.கரிகாலன் தலை மையில் நடை பெற்றது. 

எஸ்.ஆர்.வெங்கடேஷ் அறி முகவுரையாற்றினார். சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்தியிருந்த காலத் தில் தமிழின் வெற்றிடத்தை நிரப் பியவர் - தன் கவிதைகளில் திராவிட கருத்துகளை எழுதி தமிழருக்கு கொண்டு போய் சேர்த்தவர்” என்று புரட்சிக்கவிஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை கவிதைகள் கூறி விளக்கினார்.

இதையடுத்து பம்மல் பார்த் திபன், பம்மல் கோபி ஆகியோர் உரையாற்றினர். 

தொடர்ந்து சோழிங்கநல்லூர் ஜெயராமன் பாரதிதாசனின் திரைப்பட பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

பின்பு  பேசிய அருணா பத்மா சூரன், “அவ்வையார், பாரதி, திரு வள்ளுவர் இவர்களிடம் இருந்து பாரதிதாசன் எவ்வளவு மாறுபட்ட வர் என்பதையும் கூறி உழைக்காத நிலம் எவ்வாறு பயன்படாதோ, கல்வி கற்காத பெண்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது” என்று பெண் கல்வியின் அவசி யத்தை பாரதிதாசன் கவிதைகள் மூலம் விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து பொறி யாளர் கரிகாலன், “பாரதிதாசன் தமிழுக்குச் செய்த தொண்டுகளை கவிதைகள் மூலம் விளக்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் பாரதி தாசன் பிறந்த நாள் அறிக்கையில் கூறிய “உலக தமிழ்மொழி நாள்” அங்கீகாரம் வேண்டும் என்ற திராவிட மாடல் அரசுக்கு விடுத்த கோரிக்கை பற்றியும், திராவிடர் கழக பதிப்புகள் பற்றியும் கூறி முடித்தார்.

பெருங்களத்தூர் பழனிசாமி, “பாரதிதாசன் ஆரிய மாயை காலகட்டத்தில் திராவிடத்தை பேசியதும், புதுவையில் பிரெஞ்சு ஆட்சியில் பிறந்திருந்தாலும் தமிழ் இலக்கணத்தை பிழையின்றி கற்றார். சமஸ்கிருத வார்த்தைகளை நீக்கி தமிழ் எழுத்துகளை சேர்த் தார். பாரதிதாசன் இறந்ததை, “சுயமரியாதை சூரணம் மறைந்தது” என்று விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பாரதிதாசன் பற்றி திரைப்படம் தயார் செய்து அதன் மூலம் அனைவருக்கும் பாரதிதா சனின் புரட்சிக்கருத்துகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார்.

தோழர் குணசேகரன், பாரதி தாசன் கவிதைகளைப் பாடி விளக் கினார். அவரைத் தொடர்ந்து இரா.சு.உத்ராபழனிசாமி உரை யாற்றும்போது, “பாரதிதாசன் எழுதிய மானுடம் போற்று புத்த கத்திலிருந்து “துக்கடா பக்கடா” என்ற தலைப்பை விளக்கினார்.

முடிவில் தோழர் ஆவடி தமிழ் செல்வன் நன்றி கூறினார். இந் நிகழ்வில் நகர செயலாளர் மோகன்ராஜ் மற்றும் பல தோழர் கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment