சென்னை,மே3- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மய்யத்தை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்தார்.
அம்மய்யத்தில் அறுவை சிகிச்சை, ரத்த போக்கு, மயக்க மருந்து இல்லாமல் சிறுநீரக கல்லை அகற்றலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மொபீஸ் இந்தியா பவுண்டேசன் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின்கீழ் (சிஎஸ்ஆர்) ரூ.2.30 கோடியில் ‘மின்காந்த அதிர்வலை சிறுநீரககல் நீக்க சிகிச்சை மய்யம்’ அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு மருத்துவமனை டீன் கே.நாராயணபாபு தலைமை வகித்தார். புதிய சிகிச்சை மய்யத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த மருத்துவமனையில் ரூ.125 கோடியில் டவர் பிளாக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை சார்பில் ரூ.172 கோடியில் 442 படுக்கைகள் கொண்ட கட்ட டப் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
பணிகள் முடிந்ததும் ரூ.36.80 கோடியில் மருத்துவ உபகர ணங்கள் வாங்கித் தரப்படும். பின் னர், கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், இந்த மருத்துவ மனையில் ரூ.28.02 கோடியில் தாய் -_ சேய் நல மய்யத்துக்கு கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது திறக்கப்பட்ட மின் காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மய்யத்தில் அதிநவீன மருத்துவ உபகர ணங்கள் உள்ளன. இனிமேல் அறுவை சிகிச்சை, ரத்தப் போக்கு, மயக்க மருந்து இல்லாமல் சில மணி நேரங்களிலேயே சிறுநீரக கல்லை அகற்றிவிடலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment