கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

தீர்மானம் எண் 1: 

இரங்கல் தீர்மானம் 

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஒய்வு பெற்ற ஆசிரியர் சி.வேலு மற்றும் மாவட்ட கழகத் துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர்  சா.சின்னக்கண்ணு, அவரது துணைவியார் சி.பத்மாவதி அம்மையார், ஒன்றிய கழக துணைச் செயலாளர் வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ். 

மன்னார்குடி கழக மாவட்டம்

மேலவாசல் தோழர் குணசேகரன் துணை வியார் வாசுகிஅம்மையார், உள்ளிக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் வே.குமாரசாமி ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவிக்கின்றது.

தீர்மானம் எண் 2:

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களின் அறிவுறுத்தலுக் கிணங்க மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் “வைக்கம் நூற்றாண்டு விழா" கருத்தரங்கம் நடத்துவது என்றும், அதை பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்து, ஒத்தக் கருத்துள்ளவர்களையும் பங்கேற்கச் செய்வது எனக்கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் எண் 3:

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள மூடநம்பிக்கைகளை, மதக் கருத்துகளை மாணவர்களி டையே புகுத்திடும் பாடப்பகுதிகளை நீக்கி, அறிவியல் சிந்தனையுடைய மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடங்கள் அமைய வேண்டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

வரும் கல்வியாண்டில் தொடக்கக் கல்வியில் சேரும் மாணவர்களின் பெயர்களை தனித்தமிழில் பெயர்களை வைத்திட பெற்றோர்களை ஊக்கப் படுத்தும் வகையில் பிரச்சாரம்  மேற்கொள்வது எனக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 5:

பள்ளி மாணவர்கள் சேர்க்கையை ‘மதப் பண்டிகை' யான ‘‘விஜயதசமி''யை முன்னிட்டு நடத்துவதை உடனடியாகத் தவிர்த்து, மதச்சார்பற்றத் தன்மையை தமிழ்நாடு அரசு நிலைநிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, ஒன்றிய அரசிற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களும் மாநில அரசின் கவனத்தோடு செயல் பட வேண்டுமென இக்கூட்டம் மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

தமிழ்நாடு அரசு மாணவர்களுக்குவழங்கியுள்ள கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின் அடிப் படையில் மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி நேரத்தில்தனிப்பேருந்தை இயக்கிட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 7:

பழைய ஒய்வுதியத்திட்டத்தை நிறைவேற்றுக!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தந்த உறுதிமொழியின் அடிப் படையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றி, ‘‘சொன் னதைச் செய்வோம்! செய்வதையே சொல்வோம்!'' எனும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உறுதிமொழியை நிறைவேற்றி “திராவிட மாடல்" ஆட்சிக்கு மகுடம் சூட்டிட வேண்டுமென மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் எண் 8: 

உறுப்பினர் சேர்க்கை

அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியக் கூடிய நபர்களில் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை யாளர்களைஅடையாளம் கண்டு பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக்கி, புதிய அமைப்புகளை உருவாக்கிட வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக் கிறது.

தீர்மானம் எண் 9:

குலக்கல்வித்திட்டத்தை மறைமுகக்கொண்டுவரத் திட்டமிடும் ஒன்றிய அரசின் புதியக் கல்விக்கொள்கை மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை சட்டப்படி தடுத்திடமேற்கொள்ளும் தமிழ்நாடு அரசின் செயல் பாடுகளை பாராட்டுவதோடு விரைந்து இப்பிரச்சினை யில் வெற்றிகாணும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது.

தீர்மானம் எண் 10:

இதழ்களுக்கு சந்தா சேர்த்தல்

இயக்க இதழ்களான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு,மாடர்ன் ரேசனலிஸ்ட், திராவிடப்பொழில் ஆகிய இதழ்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டுவ தோடு, வாசகர் வட்டங்களைஉருவாக்கி அதிக சந்தாதாரர்களை ஏற்படுத்த வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 11:

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் உடனடியாக “பெரியார் பேசுகிறார்” - என்ற மாதாந்திரச் சிறப்புத்தொடர் கூட்டங்கள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 12:

பகுத்தறிவாளர் கழக மாவட்டக்கலந்துரையாடல் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தி அமைப்புப் பணிகள் தொடர்பான செயல்திட்டங்கள் பற்றி கலந்துரையாடி தலைமைக்கழகத்திற்கு அறிக்கை அனுப்பிட வேண்டுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13:

தமிழ்நாடு  அரசு உடனடியாக மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தினை நிறைவேற்றி, தமிழ்நாடு என்பது சமூகநீதியில் மட்டுமல்ல, அறிவியல் வளர்ச்சியிலும், பகுத்தறிவுச் சிந்தனையிலும் முன்னோடி மாநிலமாக திகழ ஆவன செய்திட வேண்டுமென தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 14:

பயிற்சி வகுப்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை இளம் தலைமுறையினர் அறியும் வண்ணம் திராவிடர்இயக்க வரலாறு, பகுத்தறிவின் பயன்கள், அறிவியல் வளர்ச்சி, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை போன்ற கருத்துகளை மய்யப்படுத்தி பகுத்தறிவாளர் கழகப் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிக்காட்டுதலின் படி பயிற்சி வகுப்புகள் நடத்துவது எனத் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண் 15:

புதிய பொறுப்பாளர்கள்

அரியலூர் மாவட்டம் 

அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் ஆசிரியர் மு.ஜெயராஜ் 

குடந்தை மாவட்டம் 

மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கி.செல் வரசன்

மாநகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இராம.புகழ்

குடந்தை ஒன்றியம்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சுவாமிமலை ஞானம்

திருவிடைமருதூர் ஒன்றியம்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் 

ஈ.வெ.ரா.ம.அறிவுமணிமுருகேசன்

பட்டுக்கோட்டை (கழக) மாவட்டம் 

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இரத்தினசபாபதி

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வீர.முருகேசன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் புலவஞ்சி இரா.காமராசு

மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வீர.முருகேசன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி தலைவர் சு.நடராசன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி செயலாளர் ச.அடைக்கலமணி

பட்டுக்கோட்டை ஒன்றியம்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஏ.மு.செல்வராசு

ஒன்றிய பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் சீனி.ஜெயராமன்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.சக்திவேல்

மதுக்கூர் ஒன்றியம்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.முரு கேசன்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சிவஞானம்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ரெ.திருமேனி

சேதுபாவாசத்திரம் ஒன்றியம்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ச.வீரமணி

பேராவூரணி ஒன்றியம்

ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கனக.இராமச்சந்திரன்.


தொகுப்பு: 

கோபு.பழனிவேல், 

ப.க. மாநில துணைத் தலைவர்


No comments:

Post a Comment