கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.5.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டும். பிரதமர் மோடி திறக்கக் கூடாது என ராகுல் டுவிட்டரில் பதிவு. திறப்பு விழாவிற்கு சாவர்க்கர் பிறந்த நாளை தேர்ந்தெடுத்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு தோழமைக் கட்சிகளை மட்டும் அழைக்க திமுக தலைமை முடிவு.
தி டெலிகிராப்:
* டில்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்ட மசோதாவை முறியடிக்க எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி ஆகியோர் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து ஆதரவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment