ஏழை மக்கள் மீது பிரதமர் மோடிக்கு கோபம் ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

ஏழை மக்கள் மீது பிரதமர் மோடிக்கு கோபம் ஏன்?

எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா

கருநாடகா, மே 2- கருநாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  சித்தராமையா கூறியதாவது:

கரோனா நெருக்கடி காலத்தில் கை கழுவும் திரவம், முகக் கவசம், செயற்கை சுவாச கருவி உள் ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந் தனர். 

கரோனா நேரத்தில் தேவையான பொருட்களை அரசுக்கு ஒப்பந்ததாரர் பசவராஜ் வழங்கினார். அவருக்கு உரிய பணத்தை இந்த பாரதீய ஜனதா அரசு பட்டுவாடா செய்யவில்லை. இதனால் அவர் கருணைக் கொலை செய்ய கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி னார். அவருக்கு நியாயம் கொடுக்க வேண்டியவர் மோடி அல்லவா?.

கல்லூரி உதவி ஆசிரியர், பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் நிய மனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியா யம் பெற்றுத்தர வேண்டும். 40 சதவீத கமிஷன் கொடுக்காததால் ஒப்பந்ததாரர் பிரசாத் என்பவர் உயிரிழந்தார்.

அமைச்சராக இருந்த ஈசுவரப்பாவுக்கு 40 சதவீத கமிஷன் கொடுக்க முடியாமல் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கே.ஆர். புரம் காவல்நிலைய ஆய்வாளர் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்து பணி இட மாற்றம் பெற்றார். ஆனால் மன அழுத் தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந் தார். ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும். இத்தகைய உயிரிழப்பு களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும்.

தனது நண்பர் அதானியின் மோசடிகள் குறித்து மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?. உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு 31 சதவீதம் அளவுக்கு மானியத்தை குறைத்துவிட்டது. இதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் கல்லை போட்டது ஏன்?. சமையல் கியாஸ் எரி வாயு உருளை விலையை அதிகரித்து விட்டனர். இதனால் ஏழை மக்கள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை கள் மீது மோடிக்கு இவ்வளவு கோபம் ஏன்?

- இவ்வாறு சித்தராமையா தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment