'தி கேரளா ஸ்டோரி' கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை; பெண்களுக்கும் அவமதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

'தி கேரளா ஸ்டோரி' கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை; பெண்களுக்கும் அவமதிப்பு

சரத்பவார் பேட்டி

மும்பை, மே 10  ஹிந்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படம் நாடு முழு வதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

கேரளாவில் காணாமல்போன பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு அய்.எஸ்.அய்.எஸ். பயங்கரவாத இயக் கத்தில் சேருவதுபோல படத்தின் காட்சி கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு இசுலாமிய அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ் நாட்டில் இந்தத் திரைப்படம் திரை யிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு இந்து அமைப்பு கள் மற்றும் பாரதீய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன. மும்பையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பொது மக்கள், தொண்டர்கள் இலவசமாக பார்க்க பா.ஜனதா தலைவர்கள் டிக்கெட் எடுத்து கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மும்பையை சேர்ந்த பாரதீய ஜனதா அமைச்சர்கள் மங்கல் பிரதாப் லோதா, அதுல் பத்கால்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் சுனில் ரானே, பரக் ஷா ஆகியோர் தொண்டர்கள் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்தனர். 

இந்தநிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த படத்தின் தயா ரிப்பாளரை பொது வெளியில் தூக்கில் போட வேண்டும் என்று தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி யில், "அவர்கள் கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை, அந்த மாநிலத்தின் பெண்களை அவமதித்து உள்ளனர். அவர்கள் 32 ஆயிரம் கேரள பெண்கள் மாயமாகி அய்.எஸ்.அய்.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சேர்ந்தவர்கள் 3 பேர் தான். அந்த படத்தின் தயாரிப்பாளரை பொதுவெளி யில் தூக்கில் போட வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment