வெளிமாநில தொழிலாளர்கள் முறையாக பதிவு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

வெளிமாநில தொழிலாளர்கள் முறையாக பதிவு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு

சென்னை,மே14- தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அலு வலர்களுக்கு பணி திறனாய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட் டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (12.5.2023) நடை பெற்றது.

கூட்டத்துக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசும்போது, "தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை அறிவித்து தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது" என்றார்.

பின்னர் அவர் தொழிலாளர் அலுவலர்களுக்கு வழங்கிய அறிவு ரைகள், ஆலோசனைகள் வரு மாறு:-

தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 18 அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர் களை விரைவாக சென்று சேர உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

தொழிலாளர் துறை அலுவ லர்கள் அமைப்புசாரா வாரியங் களில் பெறப்படும் கேட்பு மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும், நிலுவை ஏதுமின்றி செயல்பட வேண்டும். பதிவு புதுப்பித்தலிலும் நிலுவை இன்றி விரைந்து செயலாற்ற வேண்டும்.

தொழிலாளர் துறையின் செயல்பாடுகளான சமரசப் பணி கள், நீதிசார் பணிகள், சட்ட அமலாக்கப் பணிகள் போன்ற பணிகள் தொடர்பான நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் தகராறுகள் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவ னங்கள் சட்டம்-1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம்-1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம்-1972, சட்ட முறை எடை யளவு சட்டம்-2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பல்வேறு தொழிலாளர் நல சட்ட அமலாக்கப் பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.

அமலாக்க அலுவலர்கள் ஆய்வின் சமயம் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா? என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

ஆய்வின் போது வெளிமாநில தொழிலாளர்கள், தொழிலாளர் துறையின் வலைதளத்தில் தங்க ளின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்களா? என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

31.3.2023 அன்று மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கென மாநில அளவிலான ஆலோசனைக் குழு மற்றும் மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் குழு உருவாக் கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில மற்றும் மண்டல அளவி லான குழுக் கூட்டங்களை நிர்ண யிக்கப்பட்ட கால இடைவெளிக் குள் நடத்த வேண்டும்.

சமரச அலுவலர்கள் நாட்டில் தொழில் வளர்ச்சி மேம்படுத்தப் படுவதோடு, தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையிலும் தொழி லாளர் மற்றும் வேலையளிப்போர் இடையே நல்லுறவினை மேம் படுத்தும் வகையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

மேற்கண்டவாறு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் தொழி லாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment