புதுக்கோட்டை, மே 23- வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்த வழக்கில் மேனாள் சுகா தாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நேற்று (22.5.2023) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சுகா தாரத் துறை அமைச் சராக இருந்தவர் சி.விஜய பாஸ்கர். இவர் தற் போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப் பினராக இருக்கிறார். இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக் கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புப் பிரிவில் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சி யாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30-க்கு மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை யினர் சோதனை நடத் தினர்.
இந்நிலையில், அதிமுக மேனாள் அமைச்சர்
சி.விஜயபாஸ்கர் மீதான வருமானத் துக்கு அதிக மாக சொத்து சேர்த்த வழக்கில், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங் கள் கொண்ட குற்றப் பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று தாக்கல் செய்த னர்.
மேனாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மேனாள் அமைச்சருமான கே.பி.அன் பழகன் மீது நேற்று குற்றப் பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த னர். அ.தி .மு.க. அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், மேனாள் உயர்கல்வித் துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராக செயல்பட்டபோது வரு மானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறைகாவல் துறை யினர் கடந்த 19-.1.-2022 தேதி அன்று வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கடந்த
20.-1.-2022 தேதி அன்று மேனாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான தருமபுரி மாவட்டம் காரிமங்க லத்தை அடுத்த கெரே கோடஅள்ளியில் உள்ள வீடுகள், அலுவல கங்கள் மற்றும் தருமபுரி மாவட் டத்தில் உள்ள 53 இடங் களிலும், சேலத் தில் ஒரு இடம், சென்னை யில் 3 இடங்கள், தெலங் கானா மாநிலத்தில் ஒரு இடம் என மொத்தம் 58 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட் டனர்.
அப்போது ரூ.2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரொக் கம் மற்றும் தங்க நகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளி மற்றும் ஆவ ணங்கள் கண்டுபிடிக்கப் பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்பு டைய ஆவணங்கள் கைப் பற்றப்பட்டன.
மேலும், கே.பி. அன் பழகன் தனது குடும்பத் தினர் பெயர்களில் சொத் துக்கள் வாங்கியுள்ளதா கவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கே.பி. அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசா ரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறை யினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் ததாக மேனாள் அமைச்சர் கே.பி.அன்பழ கன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்தி ரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர்.
அதில் கே.பி.அன்பழ கன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதி கமாக சொத்து சேர்த்த தாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதே போன்று பினாமி பெயரில் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன், மகள் வைஷ்னவி, மரு மகள்கள், உறவினர்கள் உள்பட 11 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment