அபாயம்: எச்சரிக்கை! பலமுறை எச்சரித்தும் பயனில்லை உடல் சிதறி மரணமடைந்த பைக் சாகசக்காரர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

அபாயம்: எச்சரிக்கை! பலமுறை எச்சரித்தும் பயனில்லை உடல் சிதறி மரணமடைந்த பைக் சாகசக்காரர்

புதுடில்லி, மே 7- பைக் சாகசம் செய்கிறேன் என்று ஊர் ஊராக சுற் றிய அகஸ்தியா சவுகான் தன்னுடைய பைக் சாக சத்தைப் பார்த்து அதே போல் செய்து 3 பேர் பலியானபோதும் அதைப் பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து சாகசத்தில் ஈடுபட்டார்.

இறுதியில்  கோர விபத்தில் கை கால் தனித்து, உடல் பிளந்து, உறுப்புகள் அனைத்தும் சாலையில் சிதற உயிர் விட்டார்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அகஸ்தியா சவுகான். தொழில்முறை பைக் ஓட்டுநரான இவர், யமுனா விரைவுச் சாலை யில் டில்லிக்கு பைக்கில் அதி வேகமாக சென்றுள்ளார். 

எப்போதும் போல் இவர் ஓட்டும் போது நேரலையில் காணொளி பதிவாகிக்கொண்டே இருக்கும் இதை சமூக வலைதளத்தில் நேரலை யில் ஆயிரக்கணக்கா னோர் பார்ப்பார்கள். 

இவர் இயக்கிய பைக் கவாஸாகி நிஞ்சா இசட். எக்ஸ்-10ஆர் (ரிணீஷ்ணீsணீளீவீ ழிவீஸீழீணீ ஞீஙீ-10ஸி) ரக பைக்கில் கிட்டத்தட்ட 250 கி மீட்டர் வேகத்தை எட்டி யுள்ளார். 

அப்போது எதிர்பா ராத விதமாக கீழே விழுந்ததில் நிகழ்விடத் திலேயே தலை நசுங்கி, பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.

தொழில்முறை பைக்காரரான அகஸ் தியா இதுபோன்று அதிக வேகமாக செல்லும் வகையிலான பல்வேறு காணொலிகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

விபத்துக்கு முன்ன தாக 300 கிலோ மீட்டர் வேகத்தை எப்படியாவது எட்டி விட வேண்டும் என்ற முனைப்பில் அகஸ் தியா பைக்கை வேகமாக இயக்கியுள்ளார். 

கிட்டத்தட்ட 300 கிலோ  மீட்டர் வேகத்தை எட்டியபோது நிலை தடுமாறி கீழே விழுந் துள்ளார். அப்போது பைக் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்திருக் கலாம் என தெரிய வருகிறது.

யூடியூபர் அகஸ்தியா சவுகானின் மரணம் பல்வேறு அதிர்வலை களை ஏற்படுத்தி உள் ளது. இளைஞர்கள் பைக்கை மிதமான வேகத் தில் இயக்க வேண்டும், வெளிநாட்டில் உள்ள சாலைகளில் கூட 300 கிலோ மீட்டர் வேகம் என்பது ஆபத்தானது தான், சாத்திய மில்லை என்ற கருத்தும் எழுந் துள்ளது.

 இவர் பல முறை சமூக ஆர்வலர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இவர் செய்யும் பைக் சாகசத்தைப் பார்த்து அதே போல் தானும் செய்கிறேன் என்று கூறி மகாராட்டிராவில் இருவரும், மத்தியப் பிரதேசத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.. ஆனால் இதற்கு இவர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத நிலையில் தானே கோர மரணம் அடைந்துள் ளார்.

பதிவான சிசிடிவி காட்சிகளில் 250 கிமீ வேகம் எடுக்கும் போது காற்றின் எதிர்வேகத்தில் நிலை தடுமாறுகிறார். பின்னர் தலையில் இருந்து தலைக்கவசத் தோடு தரையில் மோத தலை தலைக்கவசத்திற் குள்ளேயே சிதறி துண்டாகிறது,

பைக்கின் பாகங்களில் பட்டு கை கால்கள் துண்டாகிவிடுகிறது வயிற்றுப்பகுதி சாலை ஓர கல்லில் பட்டு கிழிந்து உடல் பாகங்கள் சிதற இறுதியில் நெஞ்சுப் பகுதி யும் மேலாடை மட்டுமே ஒரு ஓரத்தில் கிடக்கிறது, மிகவும் கோரமான இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சியை இனிமேலும் இதுபோல் யாரும் சாகசம் செய்ய வேண் டாம் என்ற பதிவோடு சமூகவலைதளத்தில் பகிர்ந்துவருகிறனர்.

No comments:

Post a Comment