நாமக்கல், மே 23- நாமக்கல் மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 19.5.2023 மாலை 4 மணி அளவில் பெரியார் படிப்பகத்தில் கழக காப்பாளர் பொத்த னூர் சண்முகம் அவர்க ளின் தலைமையில் நடை பெற்றது.
மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் பெரியசாமி இயக்கப் பணி நடைபெறுவதற்கு நாங்கள் முழு ஒத்து ழைப்பு தருகிறோம் நாமக் கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் உள்ளன கூட்டங்கள் நடத்துவ தற்கு ஆயத்தமாகவும் மாணவர்கள் இளைஞர் களை இயக்கத்திற்கு சேர்ப்பதற்கு முயற்சி எடுப்போம். பொதுக்குழு தீர்மானங்களை செயல் படுத்திட ஒத்துழைப் போம் என்று அனைவரும் பேசினார்கள். இதில் மாவட்ட துணைத் தலை வர் அசோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இளங்கோ, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் செயலாளர வீர.முருகன், குமாரபாளை யம் நகர தலைவர் சர வணன், வெண்ணந்தூர் செல்வகுமார், ஒன்றிய தலைவர் பள்ளிபாளை யம் சீனிவாசன், பொத்த னூர் அன்புமதி சிறீதர் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறி னார்.
No comments:
Post a Comment