பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பரிந்துரை

சென்னை, மே 3-  பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தொலைநோக் குடன் சில பரிந்து ரைகளை மூத்த விஞ்ஞானியும், பிரம் மோஸ் மய்யத்தின் நிறுவனரு மான சிவதாணுப் பிள்ளை முன் வைத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதா வது: ஒரு நாட்டின் பொருளா தாரம் எந்த அளவுக்கு முக்கி யமோ அதேபோல் மக்களைப் பாதுகாப்பதும் அவசியம். இதனால், அமெரிக்காவில் தண்ணீர் அதிக அளவில் தேவைப்படும் தொழிற்சாலைகளை அனுமதிப் பதில்லை. இஸ்ரேலில் வேளாண் மைக்கு தண்ணீர் பயன்பாட்டு அளவை நிர்ணயிக்க செயற்கைக் கோள்கள் மூலம் திட்டமிடு கின்றனர். எதிர்கால தேவை யைக் கருத்தில் கொண்டு இத்த கைய திட்டங்களை இந்திய அரசும் முன்னெடுக்க வேண்டும், குறிப்பாக கடல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவ தற்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். நிலத்தில் இருந்து குடிநீரை எடுக்காமல் கடல்நீரை மாற்றி பயன்படுத்த வேண்டும். அதேபோல் செயற் கைக்கோள்களை பயன்படுத்தி நீர்மட்ட உயர்வு, நீர் மேலாண்மை, கால நிலை மாற்றம், மணல் பகுப்பாய்வு உள்ளிட்டவற்றை கணக்கிட வேண்டும்.

மேலும், கடலில் ‘ஆற்றல் தீவு’என்கிற ஒரு மிதக்கும் தீவை உருவாக்க அரசுக்கு பரிந்துரைத் துள்ளோம். ஏனெனில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காற்றாலை மூலம் ஆற்றலை எளிதில் சேமிக்க முடியும். அதேபோல் சோலார் மூலமும் அதிக அளவு ஆற்றலை உற்பத்தி செய்யலாம். முக்கிய மாக நாம் உருவாக்கக் கூடிய ஹைட்ரஜன் ஆற்றல்களை எல்லாம் சேமித்து வைப்பதற்கு கடல்தான் ஏற்ற இடம்.

நிலங்களில் சோலார் பேனல் கள் அமைத்து மின்சாரத்தை சேமிக்கும் முறையில், சூரிய ஒளி கிடைக்கும்போது மட்டுமே ஆற்றல் பெறப்படுகிறது. ஆனால் மழை பெய்யும் காலங் களில் இடையூறு ஏற்படும். இதையே செயற்கைக்கோளின் மீது நிறுவினால் 24 மணி நேரமும் சூரிய ஒளி தடையின்றி கிடைக்கும். அதிக அளவு ஆற்றலும் சேமிக்கப்படும். இந்த ஆற்றலை மைக்ரோ அலை களாக மிதக்கும் தீவுக்கு அனுப்பி, அங்கிருந்து மின்சாரமாக மாற்றி பயன்படுத்தலாம். இதை செய்வதற்கான அடிப்படை தொழில்நுட்ப வசதிகள் இந் தியாவிடம் இருக்கிறது.

அடுத்த 50 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதற்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் பயன் படுத்தப்படும். ஹைட்ரஜன் ஆற்றலானது கார்பனை வெளியிடாது. இதனால், சவுதி அரே பியாவில் தற்போதே ஹைட்ர ஜன் எரிபொருள் நிலையத்தை அமைக்கும் பணியைத் தொடங்கி விட்டனர். இதற்கான ஆய்வு களை நாமும் மேற்கொள்ள வேண்டும்.வருங்காலத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் பொருளாதார புரட்சி ஏற்படும் போது இந்தியா உலக நாடுகளின் எதிர்காலமாக இருக்கும். இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment