காதல் திருமணம் செய்துகொண்டவரின் தந்தை இறப்பில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பாம் திராவிடர் கழகம் தலையீடு - முயற்சிக்கு வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

காதல் திருமணம் செய்துகொண்டவரின் தந்தை இறப்பில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பாம் திராவிடர் கழகம் தலையீடு - முயற்சிக்கு வெற்றி!

தேனி, மே 18 - தேனி அருகே மகன் காதல் திருமணம் செய்த தால் தந்தையின் உடலை அடக் கம் செய்ய கிறிஸ்தவ திருச்சபை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திராவிடர் கழகம் சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிக்குப் பின்பு கிறிஸ்தவ தலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் ஜான்பீட்டர். கட்டு மானத் தொழிலாளி. ஜான் பீட்டருக்கு மனைவி லிகோரியா, மகன்கள் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் அரு ளானந்தம், கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கும் அமல் ராயன், ஜேசிபி ஆபரேட்டராக இருக்கும் ஆரோன், இராணு வத்தில் நர்சிங் பிரிவில் இருக்கும் ஆமோஸ் என நான்கு மகன்கள் இருக்கின்றனர். 

ஜேசிபி ஆபரேட்டராக இருக்கும் ஆரோன் தஞ்சாவூரில் எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்த போது, உடன்படித்த மாணவி யுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். 

அதனால் கடந்த 3 ஆண்டு களாக சபையிலிருந்து அக்குடும் பத்தினர் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில், ஜான் பீட்டர் நேற்று முன்தினம்  (16.5.2023)மரணம் அடைந்தார்.

இவர்களின் மதவழக்கப்படி நேற்று (17.5.2023) கோட்டூர் கிறிஸ்தவ சபைக்கான அடக்க தலத்தில் இறுதி சடங்குகள் செய்ய சபையை அணுகினர். அப்போது சபையினர். ஜான் பீட்டரின் மகன் ஆரோன் சபை வழக்கத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்த தால், அடக்க தலத்தில் இறுதி சடங்குகள் செய்ய அனுமதி இல்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் ஜான்பீட்டரின் மகன்கள் பெரிதும் தவித்தனர். 

தகவலறிந்த திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண் டன், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர் வாகி தர்மர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர் வாகி ஈஸ்வரன் ஆகியோர் தேனி காவல்துறை துணை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் இது சம்பந் தமாக நடவடிக்கை எடுக்க முறையிட்டனர். 

இதனையடுத்து, தேனி காவல் துறை துணை கண் காணிப்பாளர் பார்த்திபன் கோட்டூர் சென்று கிறிஸ்தவ சபை நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதனையடுத்து, கிறிஸ்தவ முறைப்படி ஜான்பீட்டரின் உடலை அடக்கம் செய்ய சபை நிர் வாகிகள் ஒப்புக் கொண்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment