மதுரை, மே 28 பருவநிலை மாற்ற சூழலில் மரங்கள் அவசியம் என்றும், புதிய கட்டடத்திற்காக மரங்களை வெட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த அண்ணா யேசுதாஸ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் தோவா ளை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பசுமை போர்வையாக அமைந்துள்ள 28 மரங்களை வெட்டவுள்ளனர். இந்த மரங்கள் பழையாறு கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த மரங்களை வெட்டினால் மண் அரிப்பு ஏற்பட்டு சுற்றுப்பகுதியில் பாதிப்பு ஏற்படும். எனவே, மரங்களை வெட்டாமல், மாற்றுப்பகுதியில் புதிய கட்டடங்கள் கட்டுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், மரங்களை வெட்டுவது என்பது அதிகாரிகளுக்கு கடைசி முயற்சியாகத்தான் இருக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. பசுமை போர்வையின் முக்கியத்துவத்தை அதி காரிகள் வெளிப்படையாக அறிந் திருப்பார்கள்.
பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், பசுமை போர் வையுடன் கூடிய மரங்கள் இருக்க வேண்டியது அவசியம். ஏராளமான பசுமை மரங்கள் வளர்ந்துள்ளன.
புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக இவற்றை வெட்டுவது என்பது சரி யல்ல. இதுபோன்ற அனைத்துவிதமான காரணங்களையும் கருத்தில் கொண்டு ஆட்சியர் முடிவு எடுத்து, மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment