லக்னோ, மே 17 - உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாநகராட்சியில் பாஜக வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ராமர் கோயில் கட்டப்படும் வார்டில் இஸ்லாமிய இளைஞர் ஒரு வர் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள 17 மாநகராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடை பெற்றது. வாக்கு எண்ணி க்கையின் முடிவில், இந்த 17 மாநகராட்சிகளிலுமே பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. அந்த வகையில் அயோத்தி மாநகராட்சி யிலும் பாஜக-வே அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி விவ காரத்தால், இங்கு பெரும்பான்மையான வார்டுகளில் தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால், அக்கட்சியால் 60 இடங்களில் 27 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்துள்ளது. இங்கு அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 17 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 10 இடங்களி லும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இவை ஒருபுறமிருக்க, அயோத்தி மாநகராட்சி தேர்தலில் இந்துக்கள் அதிகம் நிறைந்த வார்டில் சுல்தான் அன்சாரி என்ற இஸ்லாமிய இளை ஞர் ஒருவர், சுயேட்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுல்தான் அன்சாரி வெற்றிபெற்ற பகுதியின் பெயர் ‘ராம் அபிராம் தாஸ்’ என்ப தாகும். அயோத்தி ராம ஜென்ம பூமி கோயில் இயக்கத்தை நினைவுகூரும் வகையில் இந்தப் பகுதிக்கு ‘ராம் அபிராம் தாஸ்’ என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த வார்டில்தான், தற்போது சுல்தான் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அயோத்தியில், ராமர் கோயில் கட்டப்படும் இடத்துக்கு பின்புறமாக அமைந்து இருக்கும் இந்த வார்டில் 440 இஸ்லாமியர்களும் 3,844 இந்துக்களும் உள்ளனர். அங்கு இஸ்லாமியர்களின் வாக்கு சதவிகிதம் என்றால் வெறும் 11 சதவிகிதம்தான். ஆனால், சுல்தான் அன்சாரி 42 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுல்தான் அன்சாரி வெற்றிபெற்ற ‘ராம் அபிராம் தாஸ்’ வார்டில் பாஜக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. 2-ஆவது இடத்தை நாகேந்திர மஞ்சி என்ற சுயேட்சை வேட்பாளர் பெற்று இருக்கிறார். சுல்தான் அன்சாரியின் வெற்றியும், அதேநேரம் தாங்கள் 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதும் பாஜக-விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்துப் பேட்டி அளித்திருக்கும் சுல்தான் அன்சாரி, “அயோத் தியில் நிலவும் இந்து - முஸ்லிம் சகோதரத்துவத்துக்கும் அமைதிக்கும் இதுவே நல்ல எடுத்துக்காட்டு. எங்கள் இந்து சகோ தரர்கள் எந்த பாகுபாடும் பார்க்க வில்லை. வேறு மதத்தை சேர்ந்தவ னாக என்னை அவர்கள் நடத்தவில்லை. அவர்கள் எனக்கு ஆதரவு அளித்து வெற்றியை தந்து உள்ளனர். நான் இந்த பகுதியை சேர்ந்தவன். என் அறிவுக்கு உட்பட்ட அனைத்து விசயங்களையும் செய்வேன். எனது மூதா தையர்கள் 200 ஆண்டுகளுக்கும் முன்பாக இப்பகுதியில் வசித்தார்கள். நான் தேர்தலில் போட்டியிடப் போவதாக எனது இந்து நண்பர்களி டம் தெரிவித்தபோது, அவர்கள் முழு மனதுடன் என்னை ஆதரித்து ஊக்கம் கொடுத்தார்கள்.” என்று குறிப்பிட் டுள்ளார்.
No comments:
Post a Comment