காஞ்சிபுரம், மே 16- காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் உள்ள எச். எஸ். அவென்யூ பூங்காவில், 14.5.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் இரண்டாம் நிகழ்வாக புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா நடை பெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கி யது. நிகழ்ச்சியில் திருக்குறள் கூறி பொருள் சொல்லப்பட் டது.
புரட்சிக் கவிஞரின் பாடல் களை எழுச்சிப் பாடகர் உலக ஒளி, பொறியாளர் உ.க. அறி வரசி, மாணவி சாதனா ஆகி யோர் சிறப்பாகப் பாடி மகிழ் வித்தனர்.
ர.உஷா அனைவரையும் வரவேற்றார். கி.புகழேந்தி விழாவிற்குத் தலைமை வகித்து புரட்சிக் கவிஞர் பற்றியும் தொழிலாளர் நாள் குறித்தும் உரையாற்றினார்.
ஒருங்கிணைந்த அண்ணா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் மோ. பாஸ்கரன், அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாக ராசன், மருத்துவர் பொ.கோபால், தமிழ்நாடு அரசின் அண்ணா விருது பெற்ற கவி ஞர் கூரம் துரை, வழக்குரைஞர்
ஜி. கோதண்டராமன் ஆகி யோர் உரையாற்றினார்.
அரசு வழக்குரைஞரும், கவிதைச்சோலை அமைப்பின் பொறுப்பாளருமான கவிஞர் ஆ.க.ரமேஷ் வாழ்த்துரை வழங் கினார்.
கவிஞர் மு.சு. நரேந்திரன், கவிஞர் மு. தேவேந்திரன் ஆகியோர் புரட்சிக் கவிஞரைப் பற்றியும், தொழிலாளர் நாள் பற்றியும் கவிதை வாசித்தனர்.
'புரட்சிக்கவிஞரின் பெண் ணுரிமை' என்ற தலைப்பில் ஆ. விஜயா புரட்சிக் கவிஞரின் பாடல்களை மேற்கோள் காட்டி பெண்கல்வி, கைம் பெண் மறுமணம் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் குறித்து உரையாற்றினார்.
பன்முகத் திறன் கொண்ட கவிஞர் அமுதகீதன், 'புரட்சிக் கவிஞரும் தொழிலாளர்களும்' என்ற தலைப்பில், மக்கள் நலத் திற்காகவும் தொழிலாளர் நலத்திற்காகவும் புரட்சிக் கவிஞர் பாடிய பாடல்களையும் தம்பாடல்களையும் உணர்ச்சி பூர்வமாகப் பாடி உரையாற் றினார்.
'புரட்சிக் கவிஞரின் தமிழ் உணர்வு' என்ற தலைப்பில், முனைவர் காஞ்சி பா.கதிரவன் தந்தை பெரியார் கொள்கையை உள்வாங்கி புரட்சிக் கவிஞர் படைத்த ஹிந்தி எதிர்ப்புப் பாடல்கள், தமிழிசை வளர்க்க இசையமுது, தேனருவி படைத் தும் ஒரே இரவில் படைத்த தமிழியக்கம் குறித்தும் புரட்சிக் கவிஞர் இயற்றிய நூல்கள் குறித்து பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டும் உரையாற்றினார்.
வெ. மார்க்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். இரவு 8.30 மணிக்கு விழா நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனை வருக்கும் இயக்க நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அ.வெ. முரளி, ஆ. மோகன், காஞ்சி அமுதன், மருத்துவர் ஆறுமுகம், கு. ஆறு முகம், ந. தயாளன், கே. ராதா கிருஷ்ணன், எ. கிருஷ்ணன், தே. நாகராஜன், வி. பால கிருஷ்ணன், சொ. கோட்டீஸ் வரன், பா. அரிதாஸ், ஆ. அருள், கே. பெருமாள், கே. சிறீராமுலு, விஷார் ஜெகந்நாதன்,
ந. தமிழ்நிலவன், கே. ஜெயந்தி, அரிமா சத்தியபிரியா, அரிமா உமாமகேஸ்வரி, யோ.அ. எழி லழகன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.
ராமதாஸ், தயாளன் ஆகி யோர் அனைவருக்கும் ஊட் டச்சத்து மிக்க கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் வழங்கி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற சிறீராம் சப்ளையர்ஸ் உரிமையாளர் கே. டில்லி, மோ. பாஸ்கரன், ஆசிரியர்
கி. புக ழேந்தி, வழக்குரைஞர் ஜி. கோ தண்டராமன், மருத் துவர் பொ. கோபால் ஆகியோர் ஊக்குவித்தனர்.
No comments:
Post a Comment