விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம் தமிழ்நாட்டில் அறிமுகம்
சென்னை,மே20- விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத் தப்பட்ட நடமாடும் போக்குவரத்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விபத்து உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசலை முற்றிலும் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டி களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் கையடக்கக் கருவி மூலம் நேரடியாக அபராதம் விதிக் கின்றனர்.
மேலும், கண்காணிப்புக் கேமராக் களில் பதிவாகும் காட்சிகளின் அடிப் படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதம் விதிக்கப் படுகிறது. அது மட்டுமல்லாமல், களப்பணியில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை தங்களது அலை பேசியில் படம் பிடித்து, அதன் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடி வசூலிக்கப் பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டியவர்களிட மிருந்து சுமார் ரூ.12 கோடி வசூலிக் கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை மீறும் வாகனங்களுக்கு கண்டிப்புடன் அபராதம் விதிக்கப் படுகிறது.
இதன்மூலம் 2021-அய் ஒப்பிடுகையில் 2022இல் விபத்துகள் 11.84 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் விபத்து உயிரிழப்புகளும் 11.52 விழுக் காடு குறைந்துள்ளது. இதற்கு விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது எடுக் கப்பட்டுள்ள கடுமையான நடவடிக் கையே காரணம் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.
கேமரா பொருத்தப்பட்ட வாகனம்
இதையடுத்து, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிரான நட வடிக்கையை போக்குவரத்து காவல் துறையினர் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, தற்போது சென்னை போக்குவரத்து காவல் துறை யில், ‘இடைமறிப்பான் (Interceptor)’ என்ற நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஜம்மு காஷ்மீர், மகா ராட்டிரா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் சென்னையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இந்த வாகனங்கள் சோதனை ஓட்டமாக இரண்டு வாகனம் வாங்கப் பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை பொறுத்து ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும் ஒவ்வொரு வாகனம் வாங்கப்பட உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வெளி நாட்டு பாணியில் டிராஸ் (TROZ) என்ற கேமரா சென்னை அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் வைக்கப்பட்டு அது எடுத்து அனுப்பும் புகைப்படம் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் இந்தவகை கேமரா பொருத்த ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல், கண் காணிப்பு கேமரா மூலம் படம் பிடித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கும் நவீன கேமராக்கள் யானைகவுனி, வேப்பேரி, திருவல்லிக் கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, கோயம்பேடு, கிண்டி உள்பட 11 இடங்களில் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition) என்றழைக்கப்படும் அதிநவீன தானி யங்கி கேமராக்களும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் 'இன்டெர்செப்டர்’ என அழைக்கப்படும் ‘இடை மறிப்பான்’ ரோந்து வாகனம் சென்னையில் அறி முகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 360 டிகிரியில் சுழன்று படம் பிடிக்கும்அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் சுமார் 200 மீட்டர் தொலைவில் வரும் விதிகளை மீறும் வாகனங்களை கூட துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் கட்டுப்பாட்டறையில் இருந்தவாறே காவல்துறையினர் அபராதம் விதிப் பார்கள்.
தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் இந்த வாகனங்களை கொண்டு சென்று நிறுத்தமுடியும். கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளை தெரிந்து கொண்டு சில வாகனஓட்டிகள் சாலை விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுப்பதோடு, ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு இடங்களில் இந்த வாகனங்களை நிறுத்த முடியும். இதன் மூலம் சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீதான பிடி மேலும் இறுகுகிறது’ என்றனர்.
No comments:
Post a Comment