வி.கே. நட்ராஜ் - ஜி.எஸ். கணேஷ் பிரசாத்
[குறிப்பு: இக்கட்டுரை கருநாடக மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலுக்குமுன் மே, 6, 2023 எகனாமிக் பொலிடிகல் வீக்லி இதழில் வெளி வந்த கட்டுரையாகும். அதை மனதிற்கொண்டு கட்டுரையை வாசிக்கக் கோருகிறோம்]
பா.ஜ.க. ஆட்சியில் உள்ள ஒரே தென்னிந்திய மாநிலம் கருநாடகா. இடஒதுக்கீடுகளில் அண்மையில், தங்கள் அரசு தலையிட்டதன் பின்விளைவுகளையும் பா.ஜ.க. எதிர்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள (EWS) வகுப்பில் முஸ்லிம்களைச் சேர்த்துள்ள பா.ஜ.க. அரசு, தாழ்த்தப்பட்ட வகுப்பின ருக்கு உள் ஒதுக்கீடு கிடைக்கவும் சிபாரிசு செய்துள்ளது. இந்த யுக்திகள் எல்லாமே வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கக் கூடும்.
தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது கருநாடக மாநிலம். ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. மீண்டும் தீவிரமாக முயலும். வேறு பல காரணங்களாலும் வரவிருக்கும் தேர்தல் முக்கியமான தேர்தலாகும். விந்திய மலைக்குத் தெற்கே பா.,ஜ.க. ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கருநாடகாதான் எனவே, 2024இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் இதை நாம் பார்க்கலாம்.
எளிதில் கணிக்கத்தக்க வகையில் இன்றைய பா.ஜ.க. அரசு மாநில மக்களின் அதிருப்தியை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், ஹிஜாப் விவகாரத்தையும், பள்ளிப் பாடப் புத்தகங்கள் பிரச்சினையையும் சரிவர கையாளாததால் அவை வாத விவாதங்களுக்கு வழிவகுத்தன. பா.ஜ.க. அரசுக்கு இதனால் சோதனைகள் வலுவடைந்துள்ளன. இவ்விரண்டு பிரச்சினைகளுமே பா.ஜ.க.வுக்குப் பாதகமானவை.
அரசாங்க ஒப்பந்தங்களிலும், ஒப்பந்தக்காரர் களுக்கு அளிக்கப்பட்ட தொகைகளிலும் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்த தகவல்களால் பா.ஜ.க. அதிர்ச்சியடைந்துள்ளது. கருநாடக மாநிலத்தில் மட்டும்தான் இத்தகைய ஊழல்கள் நடந்துள்ளன என்று கூற முடியாது. இருந்தாலும் கருநாடக மாநில ஊழல் மிகவும் மோசமானது, அதிர்ச்சிகரமானது.
மற்ற தேர்தல்களைக் காட்டிலும் கருநாடக மாநிலத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு மிகவும் முக்கியமானதாகவே தோன்றியுள்ளது. பிரதமர் மோடி அடிக்கடி இந்த மாநிலத்திற்கு வந்து போனதிலிருந்தே பா.ஜ.க.வின் அச்சம் புலனாகிறது. பல புதிய திட்டங்கள் துவக்கப்பட்டன. பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பல இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒதுக்கீட்டு விவகாரத் திலும் பா.ஜ.க. குட்டையைக் கிளறிவிட்டு மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. பல ஆணையங் களையும் குழுக்களையும் ஒதுக்கீட்டு விவகாரத்திற்காக அவசரமாக அமைத்தது. இதைச் சார்ந்த குளறுபடிகள் இம்மாநிலத்தில்தான் அதிகம்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஓர் ஆணையம் 1997 முதல் கருநாடகாவில் நிரந்தரமாக உள்ளது. சமூகம் பொருளாதாரம் சார்ந்த கணக்கெடுப்பு மாநில அரசால் நடைபெற்றது. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காங்கிரஸ் தலைவர் 2015இல் கருநாடக மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போது நடந்த மக்கள் கணக்கெடுப்பு பல்வேறு ஜாதியினரின் எண்ணிக்கையையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இன்று வரை அந்தக் கணக்கெடுப்பின் முடி வுகள் வெளியிடப்படவில்லை. பல்வேறு ஜாதியினரா லும், குறிப்பாக பெரும்பான்மைச் சமூகங்களான பெருமையாக இதுவரை சொல்லப் பட்டுவரும் தொகைக்கும், லிங்காயத் மற்றும் வோக் கலிக வகுப்பினராலும் உண்மையான மக்கள் தொகைக்கும் கணக்கெடுப்பில் வேறுபாடு இருக்கக் கூடும். என்ப தாலேயே அந்தக் கணக்கெடுப்பின் முடிவை வெளியிடாமல் இருக் கிறார்கள் என்று வதந்தி உண்டு. மேற்கண்ட இரு சமூகங்களும் கரு நாடக மாநிலத்தில் பிரதானமானவை என்பது தெரிந்த விஷயம்.
இந்தக் கணக்கெடுப்புகள் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்று நீதிமன்றங்கள் நம் புகின்றன. ஆதாரபூர்வமான கணக்கெடுப்பு முடிவை வெளி யிடும்படி பல அரசியல் கட்சிகளும் நீதி மன்றங்களும் வற்புறுத்தி வந் துள்ளன. உண்மையான சமூக நிலையை இத்தகைய கணக் கெடுப்பில் இவர் களுக்கு அபார நம்பிக்கை இருப்பது அதிகப்படி யாகத் தோன்றினாலும், நம் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஜாதிகளின் முக்கியத்துவம் அதிக மாக உள்ளதையும் நம்மால் மறுக்க முடியாது.
குழப்பும் ஒதுக்கீட்டு விவகாரம்
லிங்காயத் சமூகத்தினரை வீரசைவர்கள் என்றும் லிங்காயத்துகள் என்றும் இரண்டாகப் பிரிக்க சிலர் 2018இல் முயன்றனர். இடஒதுக்கீட்டு விவகாரத்தில் இது பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சில முக்கியப் பிரமுகர்களால் பின்வரும் பார்வையில் இது தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இரு பிரிவுகளுமே ஒன்றுதான் அவை ஹிந்து மதப் பிரிவுகளே ஆகும் என்று கன்னட முதன்மைக்காகப் போராடும் கல்வியாளர் ஒருவர் கருத்தை முன்னெடுக் கிறார். அதே வேளையில், இரு பிரிவுகளையுமே ஒரு தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று வீரசைவ மகாசபை என்னும் அமைப்பும் சில அரசியல் கட்சிப் பிரமுகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
லிங்காயத்துகள் வீரசைவர்களின் காலத்திற்கு முற்பட்டவர்கள் என்றும் அவை இரண்டும் ஒன்றல்ல என்றும் லிங்காயத்துகள் ஹிந்துக்கள் அல்ல என்னும் மற்றொரு குழுவினர் கூறுகின்றனர். கருநாடக மாநில அரசியல் வரைபடத்தையும், பல்வேறு கட்சிகளின் கூட்டணியையும் இத்தகைய குழப்பங்கள் நிச்சயமாகப் பாதிக்கும் என்றே கூறலாம். குழப்பங்கள் ஏற்படுத்திய வர்களும் அவற்றால் நீண்டகாலம் பயன் எதையும் அடைந்துவிடவில்லை. லிங்காயத்துகள் ஒரு தனி மதத்தினர்; அவர்கள் ஹிந்துக்களிலிருந்து வேறு பட்டவர்கள் என்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருபவர்கள் - இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று போராடி வந்துள்ளனர். ஆனால், கருநாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த எந்த அரசும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
எஸ்சி/எஸ்.டி. வகுப்பினருக்கான தற்போதைய இடஒதுக்கீடுகளைப் பரிசீலிக்க. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் மாநில அரசு ஓர் ஆணையம் அமைத்தது இந்த ஆணையம் 2020இல் தன் அறிக்கையை வெளியிட்டது. SC வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகித மாகவும், ST வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை மூன்று சதவிகிதத்திலிருந்து ஏழு சதவிகிதமாகவும் உயர்த்த ஆணையம் பரிந்துரைத்தது. அரசும் அதனை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தது. SC/ST வகுப்பினரின் நலனைக் கருத்தில் கொண்டு சிபாரிசு செய்திருந்த ஆணையம் பாராட்டுக்குரியதுதான்.
லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த பஞ்சமசாலிகள் என்ற உட்பிரிவினர் தங்களுக்கென்று தனி ஒதுக்கீடு கேட்டுப் போராடுவதும் நிகழ்ந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக உள்ள சில மடாதிபதிகளும் அதை வழங்கும்படி மாநில அரசைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். அதேபோல,வோக்கலிக சமூகத்தினரும் தங்களுக்கான ஒதுக்கீட்டு விகிதத்தை உயர்த்தும்படி கோரிக்கை விடுத்தனர்.
பிற்படுத்தப்பட்ட (BC) வகுப்பினர் நல ஆணையம் வோக்கலிகர்களுக்கு 2C என்றும் லிங்காயத்துகளுக்கு 2D என்றும் புதிய பிரிவுகளை அரசுக்கு சிபாரிசு செய்தது. வோக்கலிகர்களுக்கு 6 சதவிகிதமும் லிங்காயத்துகளுக்கு 7 சதவீதமும் அளிக்கப்பட்டது. அதற்கு முன்பு நிலவிய 3A (4 சதவிகிதம்) 3ஙி(5 சதவிகிதம்) நீக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான 4 சதவிகித ஒதுக்கீடும் நீக்கப்பட்டது. இந்த 4 சதவிகிதமும் புதிதாக உருவாக்கப்பட்ட 2C , 2ஞி பிரிவினருக்கு சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டது. அதன்மூலம்தான் இவ்விரண்டு பிரிவினருக்குமான ஒதுக்கீடு முறையே 6 சதவீதமாகவும் 7 சதவீதமாகவும் உயர்ந்தது. கருநாடக அரசின் சட்டமன்றம் இதனை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கிற்று. இதனால் முஸ்லிம்கள் பலப்பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த இடஒதுக்கீடு ஒரே யடியாகத் தட்டிப் பறிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. அவர்களுக்கு EWS பிரிவின்கீழ் ஒதுக்கீடு தற்போது அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பட்ட 105ஆம் திருத்தத் தின்படி இந்த EWS முறை பா.ஜ.க. அரசால் திணிக்கப் பட்டது.
தற்போது செயல்படுத்ததப்பட்டது. இனிமேல் முஸ்லிம்கள் பார்ப்பனர்கள் உட்பட, வேறு பல பிரிவினருடனும், கல்வியில் முன்னேறியுள்ள இன்ன பிற பிரிவினருடனும் போட்டியிட வேண்டியது கட்டாயமாகிவிட்டது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அடையாளம் முஸ்லிம்கள் மீதிருந்து அகற்றப்பட்டு, அவர்களுக்கென இருந்த இடஒதுக்கீட்டை லிங்காயத்துகளுக்கும் வோக்கலிகர்களுக்கும் பா.ஜ.க. அரசு பரிசாக வழங்கிய தன் மூலம் சமூகத்தில் ஹிந்துக்கள்- முஸ்லிம்கள் மத்தியில் பிளவை உண்டாக்கி, வேற்றுமை ஏற்படுத்து வதுதான் பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் என்பது தெளிவாகிறது.
1975ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட எல்.ஜி. ஹாவனூர் ஆணையம், முஸ்லிம்கள் சிறுபான்மை மதத்தினராக கருதப்பட்டு ஒதுக்கீடு பெறவேண்டும் என்று மிக வெளிப்படையாகத்தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உரிமைக்குப் பாதுகாப்பளித்த சிறந்த அறிக்கை அது என்றால் மிகையாகாது. ஹாவனூர் ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும். அதில் சில பரிந்துரைகள் அரசாணைகளில் இடம் பெறவில்லை. அதில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு பற்றிய பார்வையும் ஒன்று.. தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில் எவருமே அதைச் சுட்டிக்காட்டவில்லை; நினைவுப்படுத்தவில்லை.
இடஒதுக்கீடுகளும்
அவற்றின் தாக்கங்களும்
அரசியல் தளத்தில் இந்த இடஒதுக்கீட்டு அளவு கோல்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ள விளைவுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நகர்ப்புறங் களிலும் ஊரகப்பகுதிகளிலும் உள்ளாட்சி இடங் களுக்கான ஒதுக்கீடு சார்ந்த பல புதிய கோரிக்கைகள் எழ வாய்ப்புள்ளது. பஞ்சாயத்து/நகராட்சி மன்றங்கள் SC/ST மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகிதத்தை ஒதுக்கீட்டின் உச்ச வரம்பாக, சட்டவிதிகள் வரையறுத்துள்ளன.
SC/ST வகுப்பினருக்கான உள்ஒதுக்கீடு சம்பந் தமாக மாநில பா.ஜ.க. அமைச்சரவை முடிவெடுத்தது. முன்பு இது குறித்து அலசி ஆராய 2005இல் நீதிபதி சதாசிவா தலைமையில் ஓர் ஆணையம் அமைக் கப்பட்டது. இதை இன்னும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ள இந்த ஆணையத்தின் பின்னணியில் கொஞ்சம் கவனம் செலுத்துவது முக்கியம். SC வகுப் பினரை வலது, இடது என்று பிரித்துப் பார்க்கும் பார்வையும் கருநாடக மாநிலத்தில் உண்டு.. இடதுசாரிப் பிரிவினர் கல்வியில் முன்னேற்றம் கண்டதால் ஏற் பட்ட விழிப்புணர்வும் ஒரு வகையில் இந்த விவாதங் களை அதிகரித்துள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருள் “தீண்டப்படுவோர் (Touchables)’’ என்று சில புதிய பிரிவுகள் இருப்பது தெரியவந்தது மேலும் பிரச்சினையை சிக்கலாக்கியது. போவி, பஞ்சாரா/லாமனி, கொராச்சா, கொராமா என்பவை “தீண்டப்படும்’’ தாழ்த்தப்பட்ட வகுப்பினராம். இது ஒரு புதிய குழப்பம். வலது SC பிரிவினர் அதிக அளவில் இடஒதுக்கீடுகளை அனுபவித்து வருவதாகவும் வகுப் பினருக்குள் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற பலமான கோரிக்கையும் எழுந்துள்ளது. 2012இல் வெளியிடப்பட்ட சதாசிவ ஆணைய அறிக்கை மீது கருநாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சட்டப் பேரவைக் கூட்டத்தில் மாநில அரசு மேற்கண்ட பல்வேறு பிரிவுகளுக்கும் உட்பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தை சிபாரிசு செய்தது. (எஸ்.சி (இடது)- 6%, எஸ்சி(வலது)- 5.5%, தீண்டப்படுவோர் 4.5% அவை யாவும் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2019 மே மாதம், லமானி, போவி, கொராமா, கொராச்சா எனும் “தீண்டத்தக்க’’ SC பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்கக் கூடாதென்று உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடுத்தனர். அந்தப் பிரிவினரை இடஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து நீக்குவது தொடர் பாக முடிவெடுக்க உச்சநீதிமன்றம் தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆணை யமோ, கருநாடகத் தலைமைச் செயலாளரின் இறுதிப் பரிந்துரையைக் கோரியது. இந்தக் குழப்பத்திலும் இழுபறி நிலை இன்னும் நீடிக்கிறது.
வேறு சில பிரிவுகள், குறிப்பிட்ட நான்கு “தீண்டப் படும்’’ SC வகுப்பினருக்கும் ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருக்கட்டும் என்று பா.ஜ.க. அரசு முடிவு உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணைய உத்தரவுக்கும் எதிரானது என்று எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. மொத்தத் தில் குழப்பங்கள் உச்சத்தைத் தொட்டுவிட்டன. அரசின் கண்துடைப்பு வேலை என்று அவை குற்றம் சாட்டுகின்றன. காரணம், ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி மாநில அரசு எதுவும் செய்ய முடியாத நிலை. உள் ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் SC/ST வகுப்பினருக் குள்ளேயே ஒரு சில பிரிவுகள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றன. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரிவினருக்குஉள்ஒதுக்கீடு திட்டமே அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. 2C மற்றும் 2D என்னும் புதிய பிரிவினரும்கூட பல மாவட்டங்களில் மாநில அரசின் அறிவிப்புகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். மேலும் அதிக சதவிகித ஒதுக்கீடு வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. கடுமையான எதிர்ப்பு லமானி மற்றும் பஞ்சாரா பிரிவினரிடமிருந்து தான். “தீண்டத் தக்க’’ பிரிவினராக உள்ள இந்த தாழ்த்தப்பட்டவர்கள் நாளடைவில் தாங்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக் கப்பட்டு விடக்கூடிய அபாயம் உள்ளதாகக் கூறிவரு கிறார்கள். கருநாடக மாநிலத்தின் சில பகுதிகளில் போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. இத்தனைக் குழப்பமான சூழ்நிலையில்தான் இந்த மாநிலம் தேர்தலைச் சந்திக்க உள்ளது. விளைவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஒதுக்கீட்டு விவகாரத்தில் சிக்கல்களை உருவாக்கி விட்ட பா.ஜ.க. அரசு கடைசி நிமிடத்தில் செய்வதறி யாமல் திகைத்து நிற்பது தெரிகிறது. பா.ஜ.க. முதல மைச்சர் “தீண்டத்தக்க’’ SC பிரிவினருக்கு அவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சமாதானப்படுத்தி. ஆறுதல் கூறி வருகிறார்- ஆனால், அதன்படி நடக்குமா என்று இப்போது உறுதியாக எவராலும் கூறமுடியாது. எதுவும் நடக்கலாம். தீண்டத்தக்கவர்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மற்ற இரு தீண்டத்தக்க பிரிவினரும் அதிருப்தியில் உள்ளனர். முந்தைய தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த இவர்கள் அத்தனைப் பேரும் வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
முஸ்லிம்கள் எப்போதுமே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பது தெரிந்த விஷயம். அவர்களை வழக்கமான இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கி EWS என்னும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் பிரிவில் தள்ளிவிட்டதால் முதலுக்கே மோசம் என்ற நிலைதான் ஏற்படும். வரக்கூடிய சில வாக்குகளையும் பா.ஜ.க. இழக்கப்போவது உறுதி என்று கூறலாம்.
முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காது என்பதையும் பா.ஜ.க. அரசு உணர்ந்தே இருக்கும் என்றும் கூறலாம். வாக்காளர்கள் பலர் EWS திட்டத்தால் அதிருப்தி அடைந்து பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும். வரப்போகும் தேர்தலில் இவை யாவும் என்ன விளைவை ஏற்படுத்தப் போகின்றனவோ- பொறுத் திருந்து பார்ப்போம். லிங்காயத்துகளுக்கும் வோக் கலிகர்களுக்கும் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு உயர்வால் எந்தத் தாக்கமும் ஏற்படும் என்றும் தோன்றவில்லை.
ஆனால், லிங்காயத் சமூகத்தினர் பா.ஜ.க. ஆதரவாளர்கள். வோக்கலிக சமூகத்தினர் மதச் சார்பற்ற ஜனதா தள ஆதரவாளர்கள். லிங்காயத் பிரிவினர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும். பெரிதும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆதரிப் போராகக் கருதப்படும் வோக்கலிக சமூகத்தினரின் மனப் போக்கில் இது சிறிய மாற்றத்தை உண் டாக்கலாம். அவ்வளவே!
முடிவுரை
கருநாடக மாநிலத்தில் வேலை வாய்ப்புகளில், மேற்கண்ட இட ஒதுக்கீட்டு மாறுதல்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சமூகத்தின் பல பிரிவினர்களிடமிருந்து பலவிதமான கோரிக்கைகள் வேலைவாய்ப்புகள் சார்ந்து வந்த வண்ணம் உள்ளன. அரசு சில பிரிவினருக்கு ஓரளவுக்கு மட்டுமே இதுவரை உதவியுள்ளது. முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டே தங்களுக்கு ஒதுக்கீட்டு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துவிட்ட வோக்கலிக மடாதிபதிகள் அது தங்களுக்கு மன நிறைவை அளிக்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். இதுவும் சில மாற்றங்களுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. இட ஒதுக்கீட்டில் தங்கள் பங்குக்கு எழும் கோரிக்கைகளின் மூலம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரமளித்திருப் பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்க ஜாதியினருக்கு இது பொருந்தாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்கள் ஒற்றுமை குலைந்து விடாதபடி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஒதுக்கீட்டுச் சதவிகித உயர்வு கோரிக் கையால் அவர்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டு விடக்கூடாது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒதுக்கீட்டுச் சதவிகித உயர்வு சார்ந்த கோரிக்கைகளும் நியாயமானவையே வரவிருக்கும் கருநாடக மாநிலத் தேர்வு முடிவுகள் எப்படி இருக்குமோ தெரியவில்லை. ஆனால், இட ஒதுக்கீடு என்னும் கொள்கலம் கடைந்தெடுக்கப்படும் என்றே தோன்றுகிறது. பலப்பல பிரிவுகளும் உட் பிரிவுகளும் தங்களுக்குச் சாதகமான வகையில் இந்தக் கொள் கலத்தைக் கலக்கிவிட்டன. கடைசியில் பண்டம் எப்படி உருவாகப்போகிறது என்பதை தேர்தல் முடிந்தபிறகு பார்ப்போம்.
நன்றி:
‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ - மே 6-2023
மொழியாக்கம்: எம்.ஆர். மனோகர்
No comments:
Post a Comment