மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதா? உத்தவ் தாக்கரேயுடன் கெஜ்ரிவால் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதா? உத்தவ் தாக்கரேயுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

மும்பை, மே 25- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.ராகவ் ஆகி யோர் நேற்று காலை மும்பைக்கு வந்த னர். அவர்கள் மகாராட்டிரா மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரின் மாதேசிறீ இல்லத்தில் சந் தித்துப் பேசினர். 

இந்தச் சந்திப்பின்போது டில்லி அரசைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் சிறப்புச் சட்டத்தை எதிர்த்து போராட ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது  நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் டில்லி அமைச்சர் அதிஷியும் கலந்துகொண் டனர். பிறகு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ``ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரவிருக்கிறது. 

அந்த வாக்கெடுப்பின்போது தங் களது கட்சி நாடாளுமன்ற டில்லி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று உத்தவ் தாக்கரே வாக்களித்திருக் கிறார். இந்த மசோதா நாடாளுமன் றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டால் 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மீண்டும் மோடி ஆட்சிக்கு வர முடி யாது. அமலாக்கப் பிரிவு மற்றும் சிபி அய்-யைப் பயன்படுத்தி மாநில அரசு களை ஒன்றிய அரசு கலைத்துக் கொண் டிருக்கிறது” என்று தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே பேசுகையில், ``நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இதை எதிர்க்கட்சி கள் என்று அழைக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஒன்றிய அரசு ஜனநாய கம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால் அவர்களைத்தான் எதிர்ப் பாளர்கள் என்று அழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கெனவே கொல்கத்தாவுக்குச் சென்று அந்த மாநில முதலமைச்சர் மம்தாவை சந் தித்து ஒன்றிய அரசு டில்லிக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்க ளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். டில்லியில் ஏ கிரேடு அதி காரிகளை நியமிப்பது மற்றும் இட மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஒன்றிய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது என்கிறது ஆம் ஆத்மி. ஒன்றிய அரசு புதிய நாடா ளுமன்றத்தை வரும் 28-ஆம் தேதி திறக்க விருக்கிறது. இந்தத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க, அதிகப்படியான எதிர்க் கட்சிகள் முடிவு செய்திருப்பதும் குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment