கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டுகோள்!

சென்னை, மே 11-  கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றா ண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் தங்கம் தென்னரசுவை நூற்றாண்டு விழாக் குழுவினர் சந்தித்து வேண்டுகோள் விடுத் தனர். 

கவிஞர் தமிழ்ஒளியின் படைப் புகள் அவரின் கலை இலக்கிய ஆளுமை முற்போக்கு கலைமரபு மீதான தமிழ்சமூகத்தின் கவனத் தைக் குவிப்பதற்காக பதினோறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டது. 

கவிஞர் தமிழ்ஒளி  நூற்றாண்டு விழாக்குழு.

2023 செப்டம்பர் 21அன்று தொடங்கும் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவினை உலக தமிழ்சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றினை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை யுடன் இணைத்து நடத்தவி ருக்கிறது.

இதனோடு இணைநிகழ்வாக கவிஞர் தமிழ்ஒளியின் பண்பாட்டு செயல்பாடுகளை வெகுமக்கள் கவ னத்திற்கு கொண்டு செல்ல பல் வேறு அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், கலை இலக்கிய ஆளு மைகள் பங்கேற்கும் உரையரங்கும் நடைபெற இருக்கிறது. இவை களில் பங்கேற்று நிகழ்வினை சிறப்பிக்க தமிழ்நாட்டு முத ல மைச்சர், தமிழ்வளர்ச்சி பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச் சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை அழைப்பதென விழாக் குழு முடிவு செய்தது. 

இதையடுத்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பண்பாடு தொல் லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அவரது முகாம் இல்லத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு சார்பாக மதிப்புறு தலைவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன், தலைவர் சிகரம் ச.செந் தில்நாதன், செயலாளர் இரா.தெ.முத்து, நிர்வாகி பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் சந்தித்து பங்கேற்ப தற்கான வேண்டு கோளை முன் வைத்தனர். 

நூற்றாண்டு விழாக்குழு சார் பான கோரிக்கைகளான, கவி ஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை புதுச்சேரி அரசு போல தமிழ்நாடு அரசு கொண்டாடவும், தமிழ்ஒளி படைப்புகள்மீது உயராய்வு செய்திட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் அவர் பெயரில் இருக்கை உருவாக்கி டவும் கவிஞர் தமிழ்ஒளி பெயரில் விருது ஒன்றை நிறுவிடவும், கவிஞர் தமிழ்ஒளிக்கு சென்னை மாநகரில் பொருத்தமான இடத்தில் சிலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். 

அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கைகளை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டு இவை குறித்து முதலமைச்சரிடம் பேசவும், தமிழ் வளர்ச்சி துறை ரீதியான உரிய நடை முறைகளை மேற்கொள்வ தாகவும் தன்னை சந்தித்த கவிஞர் தமிழ்ஒளி  நூற்றாண்டு விழாக்குழு நிர்வாகிகளிடம்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment