கோடைகாலத்தில் சூடான பானங்கள் உடலில் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் - ஆய்வு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

கோடைகாலத்தில் சூடான பானங்கள் உடலில் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் - ஆய்வு முடிவு

சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் பானங்களையும் குளிரான நாள்களில் சூடான பானங்களையும்  நம்மில் பலர் அருந்துவோம்.

சூடான வானிலையில் சூடான பானத்தை அருந்துவது உண்மையில் சூட்டைத் தணிக்க உதவலாம் என்று தெரியுமா?

BBC செய்தி நிறுவனத்தின் Trust Me, I’m a Doctor எனும் நிகழ்ச்சி இங்கிலாந்தின் Nottingham Trent பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தியது. அதில் ஒருவர் குளிர் பானத்தையும் சூடான பானத்தையும் அருந்தினார். அவரது உடல் வெப்பநிலையும் வியர்வையும் ஆராயப்பட்டது. குளிர்பானம் குடித்தாலும், சூடான பானம் குடித்தாலும் உடலின் வெப்பநிலை அவ்வளவாக மாறவில்லை என்று தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் நடத்தப்பட்ட சோதனையிலும் அத்தகைய முடிவு கிடைத்ததாக BBC சொன்னது.

பானம் சூடாக இருந்தாலும் குளிராக இருந்தாலும் வெப்பநிலையைச் சுமார் 37 டிகிரி செல்சியஸாக வைத்திருக்க உடல் முனைகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர். சூடான பானம் என்றால் உடலில் வியர்வை வேகமாக உற்பத்தியாகும். 

குளிரான பானம் என்றால் வியர்வை மெதுவாக உற்பத்தியாவதாகக் கூறப்பட்டது. வியர்வை சூட்டை நீக்க உதவுகிறது. 

வெப்பமான சூழ்நிலையில் நான் சூடான பானத்தைக்குடிக்கும் போது நமது உடலில் வியர்வை உற்பத்தியாகி உடலை வெளி வெப்ப நிலையிலிருந்து சமமான அளவு பாதுகாத்து வைக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டது, 

 சூடான நேரத்தில் நாம் குளிர்பானம் குடிக்கும் போது குளிர்பானத்தை உடல் சூட்டோடு சமநிலைப்படுத்த உடலில் வெப்பத்தை அது செலவு செய்கிறது. இதனால் நமது ஆற்றலும் குறையும் உடல் வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்படும் இதனால் சில உடல் நலக்குறைபாடுகள் ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment