கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி - சகாயமேரி இல்ல சுயமரியாதைத் திருமணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி - சகாயமேரி இல்ல சுயமரியாதைத் திருமணவிழா

பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்திவைத்தார்

கோவை,மே24- கோவையில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் தலைமை யில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.

மே 22, கோவை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.வீரமணி - சகாயமேரி ஆகி யோரின் மகன் வீ.சித்தார்த்தன் - க.ரெ.செல்வராஜ்- ஜெயலட்சுமி ஆகியோரது மகள் செ.சிவரஞ்சணி, ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் கோவை சிவானந்தா காலனியில் உள்ள லயன் கிளப் அரங்கில் மே 22ஆம் தேதி காலை 9 மணிக்கு தலைமை ஏற்று நடத்தி வைத் தார். 

கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மருத்துவர் இரா.கவுதமன், ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி அருணாசலம் அவர்கள், மாநில அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் மாவட்ட கழக தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வம், மாநகர தலை வர் ம.சந்திரசேகர், மாநகர செயலாளர் திராவிடமணி, மற்றும் பொதுக்குழு உறுப்பி னர்கள், பழ அன்பரசு, ச.திலகமணி, மற்றும் பகுதி கழக செயலாளர்கள் தெ.குமரேசன், கவி கிருஷ்ணன், இல. கிருஷ் ணமூர்த்தி, மற்றும் ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் கழக தோழர்கள் மற்றும் திருப் பூர் மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி, மேட்டுப்பாளை யம் மாவட்ட தலைவர் சு. வேலுச்சாமி, குன்னூர் மாவட்ட செயலாளர் நாகேந் திரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இராஜவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் முனிஸ்வரன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுல், தாரா புரம் வழக்குரைஞர் சக்திவேல், மற்றும் பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாளர் அணி தோழர்கள், திமுக மத்திய மண் டல தலைவர் மீனா லோகு, திமுக தொ.மு ச மண்டல செய லாளர் க.பெரியசாமி, 66ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப் பினர் முனியம்மாள், கிளை கழக செயலாளர் நவீன் பால முருகன், திமுக பகுதி கழக செயலாளர் பா.பசுபதி, வே.ந உதயகுமார் பங்கேற்றனர்.

மணமகளின் தந்தை க.ரெ.செல்வராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment