சென்னை, மே 16 - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாட ப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இல வசமாக வழங்கப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டு மின்றி, பென்சில், ஜாமின்ரி பாக்ஸ், கிரையான்ஸ், சீருடை, பள்ளி பை, ஷு உள்ளிட்ட பொருட்களும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
இந்த ஆண்டு பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்கள் கையில் பாடப் புத்தகம் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 2023-2024 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது.
அதனை அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமை அடைந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப் பாட்டில் அவை குடோன்களில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு அனுப் பப்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.
ஒரு சில நாட்களுக்குள் இந்தப் பணி நிறை வடைந்துவிடும். பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கும்போது அன்றைய தினமே பாடப் புத்தகங்கள் வழங்க கல்வித் துறை அனைத்து ஏற்பாடு களையும் செய்துள்ளது.
No comments:
Post a Comment