இதுதான் டிஜிட்டல் இந்தியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

இதுதான் டிஜிட்டல் இந்தியா

வருமான வரித்துறை இணையதளத்தை முடக்கி 

ரூ.3லு கோடி திருட்டு - கணினிப் பொறியாளர் கைது

பெங்களூரு, மே 18 - வருமான வரித்துறை இணையதளத்தை முடக்கி ரூ.3லு கோடியை திருடிய கணினிப் பொறி யாளரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூருவில் வருமான வரித்துறை இணைய தளத்தை முடக்கி பல கோடி ரூபாயை அடை யாளம் தெரியாத நபர்கள் திருடி இருப்பதாக சைபர் கிரைம் காவல் நிலையங் களில் வழக்குகள் பதி வாகி இருந்தது. 

இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும் பலை பிடிக்க தனிப்படை அமைத்து சி.அய்.டி. காவல் துறை கூடு தல் டி.ஜி.பி. சரத் சந்திரா உத்தரவிட்டு இருந்தார். 

அதன் பேரில், சைபர் கிரைம் காவல் துறை யினர் அந்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட தாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள் ளார்.

அவர், ஹாசன் மாவட்டம் இரேசாவே பகுதியை சேர்ந்த திலீப் ராஜுகவுடா (வயது 32) என்று தெரிந்தது. இவர், கணிப்பொறியாளர் ஆவார்.

வருமான வரித் துறையின் இணைய தளமான 'இ-பைலிங் போர் டல்' என்ற இணையதளத்தை முடக்கி உள்ளார். பின் னர் வருமான வரி செலுத்து வோரின் பெயரில் போலி வங்கிக் கணக்கை தொடங்கி உள்ளார்.

அதாவது வருமான வரித்துறை இணைய தளத்தை முடக்கி 6 நபர்களின் பெயரிலான பான் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களை யும் தெரிந்து கொண்டு, அந்த 6 நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து போலியாக தொடங்கப்பட்ட வங் கிக் கணக்குக்கு பணத்தை மாற்றி இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக 6 நபர்களின் வங்கிக் கணக்கு களில் இருந்து ரூ.3.60 கோடியை திலீப் திருடி யுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத் தில் வருமான வரித்துறை இணையதளத் தில் சில தவறுகள் இருப்ப தால், அதனை சாதகமாக பயன்படுத்தி தான், முடக்கம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, இணைய தளத்தில் இருக் கும் தவறுகள், தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு, சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment