தூத்துக்குடியில் வைக்கம் நூற்றாண்டுவிழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா இரு நூல்கள் அறிமுக விழா மாவட்ட கலந்துறவாடல்கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

தூத்துக்குடியில் வைக்கம் நூற்றாண்டுவிழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா இரு நூல்கள் அறிமுக விழா மாவட்ட கலந்துறவாடல்கூட்டத்தில் முடிவு


தூத்துக்குடி,மே 27
- 25.5.2023 அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி பெரி யார் மய்யத்தில் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் மாவட்ட தலை வர் மு.முனியசாமி தலைமையில் உற்சா கமாக நடைபெற்றது. 

தொடக்கத்தில் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரன் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை விளக்கி சிறப்புரையாற்றினார்

காப்பாளர்கள் சு. காசி, மா.பால் ராசேந்திரம் மாவட்டக் கழகச் செயலா ளர் கோ.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் இரா. ஆழ்வார், மாணவர் கழக அமைப்பாளர் செ. வள்ளி, சட்டக் கல்லூரி மாணவர் இ.ஞா.திரவியம், பெரியார் தாசன், செ.செல்லதுரை, ராபின் ஞானப்பிரகாசம், செ. சண்முகம், எஸ்.கோமதிநாயகம், செ.அழகு, அ. மதி வாணன் தஞ்சை முனைவர் கி.சவுந் தர்ராசன்உள்ளிட்ட, பொறுப்பாளர் கள் பங்கேற்று கருத்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.

மேலமாந்தையில் சுயமரி யாதைச் சுடரொளி காலாடி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இயக்கத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்தகர் ஆகி யோரின் சிலைகளை நிறுவிய சு.காசி, மா.பால்ராசேந்திரம், மு.முனியசாமி, கோ.முருகன், இரா.ஆழ்வார் ஆகியோ ருக்கு பயனாடை போர்த்தி  பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதிய பொறுப்பா ளர்களான மாவட்ட தலைவர் மு.முனி யசாமி, மாவட்ட செயலாளர் கோ .முரு கன் ஆகியோருக்கு காப்பாளர்கள் 

சு. காசி, மா.பால்ராசேந்திரம் ஆகியோர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்கள்.

தீர்மானங்கள்:

தீர்மானம்-1:

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவின் தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்- 2 :

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலை ஞர் நூற்றாண்டு விழாவினை விளக்கி அனைத்து ஒன்றியங்களிலும் தெரு முனை கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் -3:

1. 6. 2023 அன்று காலை 7 மணி முதல் நண்பகல் 2 மணி வரை  தூத்துக் குடி மாவட்டத்தின் அனைத்து ஊர்க ளுக்கும் சென்று கழகத் தோழர்களை, பொறுப்பாளர்களைச்  சந்திப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்- 4:

2.6.2023 அன்று தூத்துக்குடி ஒன்றி யம் புதுக்கோட்டையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!,

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா!,

பேரா மு.இராமசாமி எழுதிய பெரி யாரை எப்படி புரிந்துக்கொள்வது?

முனைவர்.நம்.சீனிவாசன் தொகுத் தளித்த ஆசிரியர் கி.வீரமணி 90 ஆகிய இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடத்துவதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்- 5:

சூன்-28, 29,30 மற்றும் சூலை-1 ஆகிய 4 நாட்கள் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்  பங்கெடுப்பதென முடிவு செய்யப்படு கிறது.

புதிய பொறுப்பாளர்கள்:

தூத்துக்குடி மாநகர இளைஞரணி அமைப்பாளர் இ.ஞா.திரவியம், மாவட்ட கழக துணைத் தலைவர் இரா.ஆழ்வார், மாவட்ட கழக துணைச் செயலாளர் சி..மணிமொழியன், மாநகர கழக தலைவர் த.பெரியார் தாசன், மாநகர கழக செயலாளர் செ.செல்ல துரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா .வெங்கட்ராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக .செயலாளர் 

சொ.பொன்ராஜ், மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.மதிவாணன், மாநகர பகுத்தறிவாளர் கழக செயலா ளர் ச.புத்தன் ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டுமென தமிழர் தலை வர் ஆசிரியர் அவர் களை மாவட்டக் கழகம் சார்பில்  கேட்டுக் கொள்ளப் பட்டது.


No comments:

Post a Comment