தமிழ்நாடே அமைதியான மாநிலம் உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

தமிழ்நாடே அமைதியான மாநிலம் உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட பாராட்டு!

புதுடில்லி, மே 9- அமைதியான மாநிலத்தில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று தமிழ்நாடு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர் என வதந்தி பரப்ப  ரூ.42 லட்சம்  பெற்றுக்கொண்டு போலியான காணொலிகளை தயாரித்து வெளியிட்டு இரண்டு மாநிலத்திற்கிடையே வன்முறையை உருவாக்க முயன்ற பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மனீஷ் கஷ்யப் என்ப வரை தமிழ்நாடு காவல்துறை பாட்னா சென்று கைது செய்தது. 

 மதுரை சிறையில் இருக்கும் இவர் மீது தேசப்பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன் றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், நீதிபதிகள் ‘‘அமைதியான மாநில மாக விளங்கும் தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்கும் வகையில் இவர் காணொலி களைப் பதிவிட்டுள்ளார். அமைதியைக் குலைக்கும் வகையில் இவர் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது’’ என்று கூறி,  மனுவை தள்ளுபடி செய்தார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வழக்குத் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் உச்சநீதி மன்றம் விளக்கம் கேட்டிருந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு மாநிலத்திற்கிடையே பெரும் வன்முறையை உருவாக்க பணம் பெற்றுகொண்டு மனீஷ் காஷ்யப் செயல்பட்டது உறுதியாகி உள்ளது இவருக்கு பிணை வழங்கும் போது இவர் மீண்டும் தவறு செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அவர் உருவாக்கிய வன்முறை காணொலிகளையும் நீதிபதிகள் பார்வைக்கு அனுப்பியது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தையும் கேட்ட உச்சநீதிமன்றம் மனீஷ் காஷ்யப்பின் மீதான தேசிய பாது காப்புச் சட்டத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது.

No comments:

Post a Comment