பெங்களூரு, மே 14- மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆவேசமாக வாக்களித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது கருநாடக மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைக் காட்டுகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர், டஜன் கணக்கான அமைச்சர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் இங்கு முகாமிட்டிருந்தும், ஆள்பலம், பணபலம் என அவர்களின் முழு பலம் பயன்படுத்தப்பட்ட போதிலும், மக்கள் காங்கிரசுக்கு ஒற்றுமையாக வாக்களித்துள் ளனர். இது மக்களின் வெற்றி.
மக்கள் எங்களின் பணியை ஆதரித் துள்ளனர். வெற்றி பெற்றாலும் தோற்கடிக்கப் பட்டாலும் மக்களுக்கு ஜனநாயகப் பணியாற்ற வேண்டும்.
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் அறிவுறுத்தப்படும். கட்சித் தலைமை அதுகுறித்து முடிவெடுக்கும். முதலமைச்சர் யார் என்பது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கும் கட் சியைச் சார்ந்த அனைவர்க்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment