சென்னை,மே31 - வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முறை யாக பராமரிக்கப் படுகிறதா என்பதை கண் காணிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு செய்யும் புதிய சட் டத்தை விரைவில் அமல் படுத்த சென்னை மாநக ராட்சி முடிவு செய் துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் வீட்டில் வளர்க்கக் கூடிய செல்லப் பிராணிக ளுக்கு இலவசமாக சிகிச்சை, வெறிநாய் தடுப் பூசி போன் றவை போடப் படுகிறது.
இதற்காக திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், கண் ணம்மாப்பேட்டை, மீனம் பாக்கம் ஆகிய 4 இடங்களில் இதற்கான மருத்துவமனை கள் உள்ளது.
இங்கு வெறிநாய் தடுப் பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன. செல் லப் பிராணி களை வீட்டில் வளர்ப் பதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண் டும். அதற்காக ஆண்டுக்கு ஒருமுறை ரூ.50 கட்ட ணம் செலுத்தி அதை புதுப்பித் துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரும் பாலான வர்கள் இதை முறையாக பின்பற்றுவது இல்லை.
இதனால் வீட்டில் வளர்க்கக் கூடிய செல் லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த சரி யான புள்ளி விவரங்கள் சென்னை மாநகராட் சிக்கு கிடைக்கவில்லை. ஆனால் 1,500 செல்லப் பிராணிகள் மட்டுமே சென்னையில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படு வதாக புள்ளி விவரங் கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீடுகளில் எத் தனை உள்ளன என்ற முறை யான புள்ளி விவரம் இல்லா ததால் அவற்றை ஒழுங்கு படுத்தும் புதிய திட் டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய் துள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் வீடுகளில் வளர்க் கக்கூடிய செல்லப் பிரா ணிகள் குறித்த விவரங் களை பதிவு செய்யும் நடை முறை பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் இந்த சட்டம் இன்னும் இரண்டு, மூன்று வாரங் களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க் கப் படுகிறது. இச்சட்டம் நடை முறைக்கு வரும் பட்சத் தில் இணைய வழி மூலம் நாய் வளர்ப்போரின் பெயர், அடையாள அட்டை, நாய் போட்டோ, தடுப்பூசி போட்டதற்கான சான்றி தழ் போன்றவற்றை இணை யத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தவிர செல்லப் பிராணிகளுக் கான தனியார் கிளினிக், கடைகள், நாய் இன விருத்தி செய்யக் கூடிய வர்களும் இந்த திட்டத் தில் சேர்க்கப்பட உள்ள னர்.
அவர்களும் தங்கள் பெயர், கடை, வீடு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன்படி இணைய வழி மூலம் அனைத்து விவரங்களை யும் சேகரிக்க முடிவு செய் யப்பட்டுள் ளது. ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடை முறைப்படுத்தப் பட்டால் செல்லப் பிராணி கள் முறையாக பராமரிக் கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமம் வழங் கப்படும்.
மேலும் நாய், பூனை வளர்ப்போரின் முழுமை யான விவரமும் மாநகராட் சிக்கு தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment