குறிச்சி,மே27- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு- சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு- டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் கடந்த 20.5.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குறிச்சி வீட்டு வசதி வாரியம், காமராஜர் நகரில் தி.க ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
தெற்கு பகுதி செயலாளர் தெ. கும ரேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் தி.க. செந்தில்நாதன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், ஆட்டோ சு.ராஜு இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி நா.பிரபாகரன் தொடக்க உரையாற்றினார். தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. தெற்கு பகுதி செயலாளர் இரா.கார்த்தி கேயன், தி.மு.க. வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ. காதர், தி.மு.க. தெற்கு மண்டல தலைவர் இர.தனலட்சுமி, திமுக 97ஆவது வட்ட செயலாளர் கா.மகாலிங்கம், மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்தி.க.காளி முத்து, ப.க. மாவட்ட செயலாளர் அக்ரி, நாகராஜ், பரமசிவம் சி.பி.அய்., வான வில் கனகராஜ், திமுக, வே.தமிழ்முரசு, ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் ரா.சி.பிரபாகரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment