கிருட்டினகிரி,மே8- கிருட்டினகிரி மாவட்டம் அஞ்செட்டி கோட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் களை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்றிட கோரி சிபிஅய்எம் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் தேன். கு.அன்வர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம், சிபிஅய்எம் மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகி யோர் உரைக்குப் பின்னர் சிபிஅய்எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர்.
அவர் பேசும் போது,
கோட்டையூர் கிராமத்தில் 13.4.2023 அன்று நடைபெற்ற தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் மீது தாக்குதல் நடை பெற்றது. ஜாதி ஒரு மனிதனை எவ்வாறு மிருகமாக மாற்றியுள்ளது. சக மனி தனை கோவிலுக்குள் விடக் கூடாது, தான்பெற்ற பிள்ளையை கொலை செய்வது என்றால் அந்த ஜாதி நமக்கு தேவையா? யோசிக்க வேண்டாமா? இனி நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு சலுகைகள் கேட்கப் போவ தில்லை எங்களையும் சமமாக வாழவிடு என்றுதான் கேட்கிறோம்.
நாங்கள் ஒன்றும் வெளிநாட்டவர் அல்ல, அகதிகள் அல்ல அரசியல் சட்டம் அனைவரும் சமம் என்று சொல்கிறபோது ஜாதியின் பெயரால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பிரிப்பதற்கு நீங்கள் யார்? பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஜாதி மோதல்களை உருவாக்கி விட்டுவிட்டு குளிர்காய்ந்து கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்.
எனவேதான் ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் கொண்டுவர வேண்டு கிறோம். அந்த சட்டம் என்னவென்றால் ஒருவரை கட்டி வைத்து இருவர் அடிக் கிறார்கள் என்றால் அந்த இருவரை மட்டும் அல்ல அந்த இருவரையும் தூண்டிவிட்டவனையும் கைது செய் வதுதான் ஆணவத் தடுப்புச் சட்ட மாகும்.
அதே போன்று இம்மாவட்டத்தில் இரட்டைகுவளை முறை வழக்கத்தில் இருப்பதற்கு பொறுப்பு மாவட்ட ஆட் சியர், காவல்துறை ஆர்.டி.ஓ. கவனிக்க வேண்டாமா? தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.
மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் ஆர்டிஓ நீங்கள் ஆய்வு செய்ய வேண்டாமா?
எனவே அதிகாரிகளை பார்த்துக் கேட்டுக்கொள்கிறேன். நியாயமான உரிமைகளை பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பெற்று தர வேண்டாமா? கோட் டையூர் பிரச்சினையில் அடித்தவர் மீது வழக்கு அடிபட்டவர் மீதும் வழக்கா? இதுசரியா? காவல்துறை பாரபட்சமாக நடந்து கொள்வதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே நாங்கள் கேட்டுக் கொள்ளு வதெல்லாம் கிருட்டினகிரி மாவட் டத்தில் ஆணவக் கொலைகள் நடை பெறக் கூடாது, ஜாதி மோதல் நடக்கக் கூடாது. ஜாதிஅடிபடையில் கலவரம் நடக்கக் கூடாது.
எனவே, அனைத்து கட்சியையும் ஒருங்கிணைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி இன்னும் யார்,யார் வருகிறார் களோ அவர்களை கொண்டு மகத்தான பேரியக்கத்தை உருவாக்குவோம்.
மேல்ஜாதி, கீழ்ஜாதியற்ற ஜாதியற்ற சமுதாயத்தை அமைப்பதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் இங்கு அனாதைகள் அல்ல உங்களுக்கு பின் னால் செங்கொடி இயக்கம் இருக் கிறது. இன்றைக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.
ஒன்றியத்தில் ஆளக்கூடிய பிஜேபி என்ன நினைக்கிறது என்றால் திமுக ஆட்சியில் அங்கு ஒரு ஜாதிக் கல வரம், இங்கு ஒரு ஜாதிக் கலவரம் உண்டாக்கி பார்த்தீர்களா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பாஜக மறைமுகமாக செய்துவருகிறது.
கோட்டையூரில் நடைபெற்ற வன் முறைக்கு பாஜக,ஆர்எஸ்எஸ் சம்பந்த மில்லை என்று சொல்ல முடியுமா? மாநிலத்தில் எங்கே ஜாதிக் கலவரம் நடந்தாலும் சரி, மதக் கலவரம் நடந்தாலும் சரி அதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்றால் மோடி, அமித்ஷா வகையறாக்கள் இருக் கிறார்கள்.
எனவே மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி சார்பில் சொல்கிறேன் தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழ கத்தின் தலைமையிலான ஒரு வலுவான மதச் சார் பற்ற அணியாக செயல் படுகிறது. நீ என்ன ஆட்டம் போட்டாலும் சரி வானத் திற்கும் பூமிக்கும் குதித்தாலும் சரி தமிழ் நாட்டை கலவர பூமியாக மாற்றுவதிலே நீங்கள் வெற்றி பெற முடியாது என்பதை நான் அழுத்த மாக சொல்ல விரும்பு கிறேன். பாஜக இந்தியாவை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. பக்கத்து மாநில மான கருநாடகாவில் பாஜக தூக்கி எறியப் பட்டு காங்கிரஸ் அரிய ணையில் ஏறப் போ கிறது.
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்.
எனவே, ஜாதி ஏற்ற _ தாழ்வுக்கு இடம் கொடுக்காதீர்கள் பிள்ளைப் பருவத்திலேயே ஜாதியில்லா பிள்ளை களை வளருங்கள் ஜாதிய எண்ணம் மனிதனை அழித்து விடுகிறது. தாழ்த் தப்பட்ட சமூக மக்களை இழிவு படுத்துகிற நிலை இனி இந்த மண்ணிலே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத் துழைக்க வேண்டும் என்று பேசினார். இறுதியாக கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment