உரத்தநாடு, மே 13- உரத்தநாடு ஒன்றியம் புலவன்காட் டில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் எழுச்சி யுடன் நடைபெற்றது.
11.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் புலவன்காட்டில் வைக் கம் போராட்ட நூற் றாண்டு விழா பொதுக் கூட்டம் சிறப்பாக நடை பெற்றது.
நிகழ்ச்சி தொடக்கத் தில் Ôமந்திரமல்ல எல்லாம் தந்திரமேÕ என்னும் அறிவியல் விளக்க விழிப்பு ணர்வு நிகழ்ச்சியை தெற்கு பகுதி செயலாளர் முக் கரை க.சுடர்வேந்தன் நடத்தினார்.
மண்டலக்கேட்டை த.பர்தீன் அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார்.
ஒன்றிய செயலாளர் நல்.பரமசிவம் தலைமை வகித்து உரையாற்றினார்.
ஒன்றியத்தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார் மாவட்ட செயலா ளர் அ.அருணகிரி, மாவட் டத் தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் முன்னிலை யேற்று உரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திரா பதி, பெரியார் வீரவிளை யாட்டு கழக மாநில செய லாளர் நா.இராமகிருஷ் ணன், மாநில அமைப்பா ளர் இரா.குணசேகரன், கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி வைக்கம் போராட்ட வரலாறு, திராவிட மாடலின் சிறப்புகள் மற்றும் கழக கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
கிழக்குப் பகுதி செய லாளர் தன்மானம், ஒன் றிய விவசாய அணி தலை வர் கக்கரக்கோட்டை ம.மதியழகன், ஒக்கநாடு மேலையூர் வீரத்தமிழன், சாமிநாதன், மத்தூர் நில வன், நெடுவை கு.லெனின், புலவன்காடு மேனாள் ஊராட்சி மன்றத் தலை வர் வி.எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கழகத்தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment