ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 12.5.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் நிதிஷ் குமார் தகுதியானவர் என்கிறது தலையங்க செய்தி.

* அரசியல் அரங்கில் நுழைவதற்கும், உட்கட்சி அல்லது உட்கட்சி பூசல்களில் பங்கு வகிக்கவும் ஆளுநருக்கு அரசமைப்பு மற்றும் சட்டங்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், மேனாள் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, அப்போதைய முதலமைச்சர் உத்தவ்வை அழைத்தது நியாயமில்லை என்று அதிரடி தீர்ப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜனநாயகத்தில், "நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கையில் இருக்க வேண்டும்" என்று கூறிய உச்ச நீதிமன்றம், டில்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தில் பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் தொடர்பான நடவடிக்கைகள் தவிர (NCTD) நிர்வாக சேவைகள் மீது மாநில அரசு சட்ட மன்ற மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து பீகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

தி டெலிகிராப்:

* இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்ற பெயரில் டார்வின் தத்துவத்தை புறக்கணிப்பதன் மூலம், மாண வர்களை எத்தகைய அறிவுசார் எதிர்காலத்திற்கு இந்த அரசு இட்டு செல்கிறது? என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் இருந்து டார்வினை நீக்கியது, நவீன இந்தியாவின் வரலாற்றில் இணையற்ற ஒரு தற்கொலைப் பிறழ்ச்சி என்பது என் கருத்து என்கிறார் பேராசிரியர் ஜி.என்.தேவே.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment