வைக்கம் நூற்றாண்டு பொதுக்கூட்டங்கள் நடத்துவதென செய்யாறு கழக மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

வைக்கம் நூற்றாண்டு பொதுக்கூட்டங்கள் நடத்துவதென செய்யாறு கழக மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்

செய்யாறு, மே 23- செய்யாறு கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 21.5.2023 அன்று ஞாயிற் றுக்கிழமை காலை 11.00 மணி யளவில்,  செய்யாறு படிகலிங்கம் மெடிக்கல்ஸ் உள்ளரங்கில் நடை பெற்றது. 

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி. வெங்கட்ராமன் கடவுள் மறுப்பு கூறினார். செய் யாறு நகர கழகத் தலைவர் தி. காம ராசன் அனைவரையும் வரவேற்றார். 

மாவட்ட கழகத் தலைவர் 

அ. இளங்கோவன் கூட்டத்தின் நோக் கம் குறித்து எடுத்துக்கூறி தலைமை உரையாற்றினார். 

தலைமை கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கி, அவற்றைச்  செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பகுத்தறிவு, கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, சம வாய்ப்பு முதலியவை குறித்தும்  தந்தை பெரியாரின் 95 ஆண்டுகால தொண்டு குறித்தும் தமிழர் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தம் 90 வது வயதிலும் நாள்தோறும் சுற்றுப்பயணம், பிரச்சாரம்,  விடு தலைப்பணி, நூல்கள் படைக்கும் பணி முதலியவை குறித்தும்  உரை யாற்றினார். இயக்க வளர்ச்சிக்கு அனைவரும் முனைப்புடன் செயல் பட வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்தார்.‌

தீர்மானங்கள்: 

1. ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங் களைச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.   

2. வைக்கம் நூற்றாண்டு குறித்து  பொதுக் கூட்டங்கள் நடத்துவ தென்று  தீர்மானிக்கப்பட்டது.   

3. விடுதலை சந்தா சேர்த்தல், கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்த் தல் என்று தீர்மானிக்கப்பட்டது.   

4.  குற்றாலம் பயிற்சி முகாமிற்கு 25 இளைஞர்களை அனுப்புவது என்று  தீர்மானிக்கப்பட்டது.   

பள்ளி, கல்லூரி மாணவர்களும் கழகத் தோழர்களும் அரங்கு நிறைய அமர்ந்திருந்தனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் என்.வி. கோவிந்தன், தோழர் வெங் கடேசன், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட திராவிடர் கழக மாணவர் கழக அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் பூர்ணிமா, மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர் ஆ. அமுதா, உடற்கல்வி ஆசிரியர் டி. சோமநாதன், தோழர் கள் ஆர். சிவக்குமார், தேசிய தட களப் போட்டிகளில் இடம்பெற்ற சத்தியசிறீ  உள்ளிட்டோரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோரும்  பங்கேற்றனர். தோழர் கஜபதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment