சென்னை, மே 22- பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023-2024ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்களுக்கான குருப்-சி, குருப்-டி பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக தேசிய அளவில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை எஸ்எஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023-2024ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை எஸ்எஸ்சி இணையதளத்தில் (<www.ssc.nic.in>) வெளியிட்டுள்ளது.
அதன்படி, மெட்ரிக் மற்றும் பிளஸ் 2 கல்வித்தகுதி கொண்ட பணிகள், இளநிலை பொறியாளர், சுருக் கெழுத்தர். ஒன்றிய காவல் படை உதவி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள்இதில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment