தாராபுரம், மே 27- 21.5.2023 ஞாயிறு காலை 10:30 மணிக்கு கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் தாரா புரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் க.கிருஷ் ணன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் வழக் குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் வரவேற் புரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.முனிஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் கே.என்.புள் ளியான், மாவட்ட துணைச் செயலாளர் நா.மாயவன், பொதுக்குழு உறுப்பினர் கி.மயில்சாமி, வழக்குரைஞர் நா.சக்தி வேல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
கூட்டம் நோக்கம் பற்றி மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வே.ராஜவேல், கணியூர் ராமசாமி, மணி, கண்ணன், பிரபாகரன், ராதாகிருஷ்ணன், த.நாகராசன், மடத்து குளம் ஒன்றிய செயலாளர் மா.தங்க வேல், சிறீ.துரையரசன், நா.செல்வராஜ், உடுமலை நகர செயலாளர் வே.கலை யரசன், உடுமலை நகர தலைவர் அ.ப.நட ராஜ், ஆலம்பாளையம் பெரியார் பித்தன், கந்தவடிவேல், உடுமலை நகர அமைப்பாளர் தி.வெங்கடாசலம் மற்றும் புதிதாக கழகத்தில் இணைந்த கழகத் தோழர்கள் ச.சாய்பைரவ்,
ச.சதீஸ்குமார், சு.வினோத்குமார் ஆகி யோர் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண் 1:
மே - 13 ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை ஏற்று செயல்படுத்துவதென முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 2:
தாராபுரம் கழக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா, தெருமுனைக் கூட்டங் களை தொடர்ச்சியாக நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 3:
தாராபுரம் மாவட்டத்தில் பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது என்றும், பயிற்சிப் பட்டறையில் புதிய மாணவர்கள், இளைஞர்களை பெரு மளவில் பங்கேற்க செய்வதென முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 4:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரம், கிராமங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்தும், புதிய கிளைக் கழகங்களையும் உருவாக்குவ துடன் கிளைகள்தோறும் கழகக் கொடி யேற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 5:
புதிய பொறுப்பாளர்கள்
தாராபுரம் மாவட்ட தி.க. அமைப் பாளர் - வெள்ளகோவில் மு.நல்லசிவம்
தாராபுரம் மாவட்ட தி.க. இளை ஞரணி அமைப்பாளர் - வல்லக்குண் டாபுரம் சு.வினோத்.
உடு மலை நகரம்
நகர தலைவர் - வே.கலையரசன், நகரச் செயலாளர் தி.வெங்கடாசலம், நகர அமைப்பாளர் அ.ப.நடராஜ், உடு மலை ஒன்றிய தலைவர் - ஆலம்பாளையம் ச.பெரியார் பித்தன், உடுமலை ஒன்றிய செயலாளர் ஆலம்பாளையம் தி.கந்த வடிவேல், ஜோத்தம்பட்டி கிளைக் கழக செயலாளர் - ஆ.சதிஸ்குமார், தாராபுரம் மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் துங்காவி
வெ.பிரபாகரன்.
No comments:
Post a Comment