சென்னை,மே28 - ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத் துவக்கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித் துள்ளார்.
சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலை, டூமிங் குப்பத்தில் மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார் பில் முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பய னாளிகள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்...
ஸ்டான்லி மருத்துவ மனை , திருச்சி, தருமபுரி உள்ளிட்ட மருத்துவ மனை மருத்து வக்கல்லூரி களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மருத் துவ ஆணையம் கூறியுள் ளது குறித்த செய்தியா ளர்களின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிர மணியன் பதிலளித்த போது கூறியதாவது,
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் ஆயுஸ் அமைச்சரையும் சந்திக்கவுள்ளோம் என் றும் அடுத்த ஆண்டு தேர் தலை மனதில் வைத்து ஆணையங்களை அனுப்பி பூதக்கண்ணாடி வைத்து குற்றம் கண்டு பிடிக்க நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பது நடக்காது என்றும் கூறினார்.
மேலும் சிசிடிவி, மருத்துவர்கள் கைரேகை பதிவு என்பது உடனடி யாக சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சினை தான் இதற்காக அங்கீகாரம் ரத்து செய்வோம் என்பது சரியல்ல. இவையெல் லாம் சரிதானா என்பதை சம்பந்தபட்ட அதிகாரி கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என கூறினார்.
சிசிடிவி கேமராக்கள் இல்லாத ஒரே காரணத் தினால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று தேசிய மருத்துவ ஆணையம் சொல்லி இருப் பது அதிகபட்சமான செயல் என்றும் கூறினார்.
இது குறித்து முதல மைச்சர் வந்ததுடன் ஆலோசனை செய்து ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பிரச்சினை களுக்கு தீர்வு காண்போம் இதனால் மருத்துவ சேர்க்கை பாதிக்காது என்று பதிலளித்தார்.
அதோடு, சீனாவில் பரவி வரும் உருமாறிய கரோனா வகை ஙீஙிஙி தமிழ்நாட்டில் பரவ வில்லை என்றும், எந்த வைரஸ் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது என கூறினார்.
தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழல் தான் உள்ளது அவர் களிடன் சிகிச்சை பெறுவர் களும் பாதுகாப் பாக தான் உள்ளார்கள் மருத்துவர் களுக்கு தமிழ் நாட்டில் தனி பாதுகாப்பு சட்டம் தேவையில்லை என கூறினார்.
மேலும் ஹிஜாப் அணிந்த பெண் மருத்து வரை பணி செய்ய விடாமல் தடுத்த விவகா ரத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர் என கூறினார்.
No comments:
Post a Comment