பெரம்பூர், மே 24 - வியாசர்பாடியில் நடந்த தீமிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட னர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டார். அதே திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்றனர்.
கல்லூரி மாணவர்கள் மோதல் சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை காந்தி நகரில் உள்ள பீலிகான் கோவிலில் நேற்று முன்தினம் (22.5.2023) இரவு தீ மிதி திருவிழா நடைபெற்றது.
இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இந்த விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் இருதரப்பையும் சேர்ந்த 2 பேர் காயம் அடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றி எம்.கே.பி. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரையும் சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
முன்னதாக இந்த தீ மிதி திரு விழா வில் கொடுங்கையூர் கட்ட பொம்மன் தெருவைச் சேர்ந்த ராஜன், தன்னு டைய மனைவி கனிமொழி (வயது 35) மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண் டார். அப்போது உணவுக் கொடை வழங்கப்பட்டது.
கனிமொழி உணவுக் கொடை பெற கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தார்.
அடையாளம் தெரியாத நபர் கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கனிமொழி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சரடை பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து எம்.கே.பி. நகர் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கண் காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment