சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு இராஜேந்திரன் நினைவேந்தல்- படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு இராஜேந்திரன் நினைவேந்தல்- படத்திறப்பு

உரத்தநாடு, மே 3- உரத்தநாடு பெரியார் பெருந் தொண்டர் ஆர்.பி.சாமியின் மருமகன், திரு வோணம் ஒன்றிய கழக தலைவர் சாமி. அர சிளங்கோவின் மைத்துனர், இரா.மேகநாதன், 

இரா.ஈழமணி ஆகியோரின் தந்தையார், முழுமதி யின் வாழ்விணையர் சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு இராஜேந்திரன் அவர்களின் நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 29.04.2023 அன்று மாலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் மேலராஜவீதி அய்யன்குளம் மேகநாதன் இல்லத்தில் நடை பெற்றது

தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்து நினைவுரை யாற்றினார்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் 

இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச்செயலாளர் அ. உத்திராபதி, உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.இரவிச் சந்திரன் ஆகியோர் முன்னிலையேற்று நினை வுரையாற்றினார்கள்

தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர், தி.மு.க மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, இராஜேந்திரன் படத்தினை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர அமைப்பாளர் செ. தமிழ்செல்வன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக் குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், உரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார், உரத்த நாடு நகர துணைத்தலைவர் மு.சக்திவேல், நகர இளைஞரணி செயலாளர் ச.பிரபாகரன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் கு.குட்டி மணி, கண்ணை உலக.கவுதமன், உரத்தநாடு துரை வீரமணி, டைலர் ஜெகதீசன், தி.மு.க சீராலூர் மோகன், பாரதிதாசன் (தி.மு.க,) மணி.பாஸ்கர் உள் ளிட்டோர் கலந்துகொண்டு நினைவை போற்றினர்.

No comments:

Post a Comment