புதுடில்லி, மே 18 - ஒன்றிய அரசின் பல்வேறு துறை களில் இணைச் செயலர், இயக்குநர் மற்றும் துணை செயலர் பணிகளில் தனியார் துறை நிபுணர்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) முறையில் பணியமர்த்த ஒன்றிய அரசு தீர்மானித்திருப்பதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் 12 துறைகள் மற்றும் அமைச் சகங்களில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பணியிடங்களில் தனியார் துறை நிபுணர்களை நேரடி நியமன முறையில் பணிக்குத் தேர்வு செய்யுமாறு மத்திய பணியாளர் (யுபிஎஸ்சி) தேர்வாணை யத்தை ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
வழக்கமாக ஒன்றிய பணியாளர் தேர்வாணை யம் சார்பில் நடத்தப்படும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான குடிமைப் பணிகள் தேர்வு மற்றும் அந்தந்த மாநிலங்கள் சார்பில் நடத்தப்படும் குரூப்-1 பணிகளுக்கானத் தேர்வில் தகுதிபெற்று பணி அனுபவம் பெற்றவர்களை இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச்செயலாளர்களாக பல்வேறு அரசுத் துறைகளில் நியமனம் செய்யப்படுவர்.
இந்தச் சூழலில், தனியார் துறைகளில் பணி யாற்றும் நிபுணர்களை, இந்த அரசுத் துறை நிர்வாகப் பணியிடங்களில் நியமிக்க ஒன்றிய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
எந்தெந்தத் துறைகள்?
ஒன்றிய வேளாண் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை, ஒன்றிய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைசச்கம், ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழான உயர் கல்வித் துறை, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம், ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் கீழான சட்ட விவகாரங்கள் துறை, ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழான ஒன்றிய தொழிலக மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்த கத்துறை, மருந்து உற்பத்தித் துறை, ஒன்றிய பள்ளி கல்வித் துறை மற்றும் எழுத்தறிவுத் துறை உள்ளிட்டத் துறைகளில் இணைச் செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் தனியார் துறை நிபுணர்களை நியமிக்க அறி வுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ‘நேரடி நியமன’ பணியாளர் தேர்வு குறித்த விரிவான விளம்பரம் மற்றும் அறிவு றுத்தல்கள் யுபிஎஸ்சி வலைதளத்தில் வரும் 20-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மே 20-ஆம் தேதி முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக் கலாம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி யாளர் தேர்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2018 முதல்...
இந்தப் புதிய ‘நேரடி நியமனம்’ நடைமுறையில் முதன் முறையாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுபிஎஸ்சி பணியாளர் தேர்வை நடத்தியது. அப்போது இணைச் செயலர் அளவிலான 10 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் பல்வேறு ஒன்றிய அரசுத் துறைகளில் 3 இணைச் செயலர்கள், 19 இயக்குநர்கள் மற்றும் 9 துணைச் செயலர்கள் அளவிலான பணியிடங்களில் பணி யமர்த்த 31 பெயர்களை யுபிஎஸ்சி பரிந்துரை செய் தது. தற்போது மூன்றாவது முறையாக ‘நேரடி நியமனம்’ நடைமுறையிலான பணியாளர் தேர்வு வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment